கத்திரிக்காய் மசாலா பிரியானி

சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 2
தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.
- 3
மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் வேர்க்கடலைய் வறுக்க; முக்கால்வாசி வருந்த பின் எள் சேர்க்க, எள் பட படவென்று வெடிக்கும். தேங்காய் பொடி சேர்த்து சிறிது பொன்னிறமான பின் அடுப்பை அணைக்க. ஆறின பின் வறுத்த பொருட்களை மிக்ஸியில் பொடி செய்க. இது மசாலா பொடி. கத்திரிகாய்களை ஒரு கத்தியால் சின்ன துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். உடனேயே எண்ணையில் பொறிக்க, 70% வேகட்டும். மீதி 30% கிரவியில் வேகவைப்போம். கத்திரிகாய்களை எளியே எடுத்து தனியாக வைக்க
- 4
அந்த பாத்திரத்தையே அதில் உள்ள எண்ணையுடன் மிதமான நெருப்பின் மேல் வைக்க, கடுகு போடுக; பொறிந்த பின் சீரகம். வெந்தயம், பெருங்காயப் பொடி போட்டு தாளித்து ள்ளுங்கள். வெங்காயம் சேர்க்க. உப்பு கறிவேப்பிலை சேர்த்து பிரவுன் ஆகும்வரை வதக்க மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்க. ½ கப் தண்ணீர் சேர்க்க. சீரகப் பொடி தனியா பொடி, மிளகாய் பொடி சேர்த்து கிளற. பின் தயாரித்த தேங்காய் மசாலா பொடி சேர்த்து கிளற 10 நிமிடங்கள். சிறிது தண்ணீர் சேர்த்து நெருப்பை குறைக்க வீடு பூரா வாசனை நிரம்பும். புளி தண்ணீ சேர்க்க.
- 5
கொதிக்க வைக்க. நெருப்பை குறைத்து கிளறிக்கொண்டே இருக்க. கெட்டியாகட்டும் உங்கள் அடுப்பை பொறுத்து 15 -20 நிமிடங்கள் ஆகலாம். எண்ணை பிரிந்து மேலே மிதக்கும். பொறித்த கத்திரிகாய்களை சேர்க்க. மெல்ல கிளர, இன்னும் 10-15 நிமிடங்கள் காய்கள் இதிலேயே இருக்கட்டும். கொத்தமல்லி சேர்க்க மூடி வைக்க. மசாலா கறி தயார். பிரியாணி செய்ய: மிதமான நெருப்பின் மேல் ஒரு சாஸ் பெனில் எண்ணை சூடான பின் வெங்காயம் சேர்த்து பிரவுன் ஆகும் வரை வதக்க—3 நிமிடங்கள் தனியாக எடுத்து வைக்க
- 6
அந்த வாணலியிலேயே பிரியாணி செய்க. மிதமான நெருப்பின் மேல் வைத்து நெய் சேர்க்க பிரியாணி மசாலா, தயிர். புதினா. பச்சை மிளகாய், பிரவுன் ஆன பாதி வதக்கிய வெங்காயம் சேர்த்து கிளற. பாதி பாஸ்மதி சாதம், கத்திரிக்காய் மசாலா கறி அதன் மேல் மீதி பாதி சாதம், மீதி பிரவுன் வெங்காயம் (layering) சேர்த்து மூடுக.
குறைந்த நெருப்பின் மேல் 5 நிமிடங்கள் வைக்க. அடுப்பை அணைக்க சுவைக்க. 30 நிமிடங்கள் ஆன் பின் எல்லா சுவைகளும், வாசனைகளும் ஓன்று சேர்ந்த பின் பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுவை நிறைந்த கத்திரிக்காய் மசாலா பிரியானி(brinjal masala biryani recipe in tamil)


வாழைப்பூ பிரியாணி


குட்டி வெங்காயா மசாலா கறி பிரியாணி (Gutti vankaya masala curry biryani recipe in tamil)


அன்னாசி பழ ரசம்


பகாரா பைன்—கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain recipe in tamil)


மிர்ச்சி கா சலான் (Mirchi kaa salaan recipe in tamil)


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


கத்திரிக்காய் மசாலா கறி (bagaara bain)


எண்ணை கத்திரிக்காய், ஸ்பைஸி கிரேவி (Ennei kathirikkaai gravy recipe in tamil)


கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread


ப்ரசல் ஸ்பரவுட்ஸ் மசூர் தால் கூட்டு


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


பீட் ரூட் ரசம்


வரகு அரிசி பிரியானி


கொத்தமல்லி ரசம்


ஸ்ட்வ்ட் (Stuffed) கத்திரிக்காய் சாம்பார்


பாசி பயறு வாழைப்பூ இட்லி


பயத்தம் பருப்பு மசியல் (Payathamparuppu masiyal recipe in tamil)


பூசணிக்காய் சாம்பார்


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


பூசணிக்காய் மசாலா


ரோடு கடை சால்னா


கொத்தமல்லி புலவ், பச்சடி


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்


படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா


கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா


புதினா ரசம்


சன்னா மசாலா (Channa masala recipe in tamil)


பட்டாணி சுண்டல். பட்டாணி கூட்டு

கமெண்ட் (8)