கேபேஜ் ரைஸ்

Navas Banu
Navas Banu @cook_17950579

கேபேஜ் ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப் பாசுமதி அரிசி
  2. 1/4 கிலோ முட்டைக்கோஸ்
  3. பாதி கேப்ஸிகம்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1 பச்சை மிளகாய்
  6. 1 துண்டு இஞ்சி
  7. 5அல்லி பூண்டு
  8. 2 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  9. தேவைக்கு உப்பு
  10. 1டீ ஸ்பூன் சோயா சாஸ்
  11. 2டீ ஸ்பூன் நல்ல மிளகு தூள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முட்டைக்கோஸை நீளத்தில் நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    கேப்ஸிகத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  4. 4

    அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி விட்டு 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

  5. 5

    ஒரு பாத்திரம் அடுப்பில் வைத்து அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெயும் தேவைக்கு உப்பும் சேர்த்து கொதித்ததும் அதில் அரிசியை சேர்த்து வேக வைக்கவும்.

  6. 6

    அரிசி முக்கால் பாகம் வெந்ததும், ரைஸை ஒரு வடிகட்டியில் வடித்து எடுக்கவும்.

  7. 7

    வடித்த ரைஸை நன்றாக ஆற விடவும்.

  8. 8

    ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய இஞ்சி, பூண்டு பச்சைமிளகாய், கேப்ஸிகம் சேர்த்து வதக்கவும்.

  9. 9

    இதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  10. 10

    பின்னர் இதில் முட்டைக்கோஸை சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  11. 11

    பின்னர் இதில் ரைஸ் சேர்க்கவும். இதனுடன் சோயா சாஸ், நல்ல மிளகு தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes