முட்டை சப்பாத்தி

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

#Grand2
பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்க

https://youtu.be/B3jesSF46iA

முட்டை சப்பாத்தி

#Grand2
பார்ட்டில வெறும் சப்பாத்தி குருமா பரிமாறத விட சுடச் சுட சப்பாத்தி ரெடி செய்து அதை இந்த மாதிரி ஒரு வித்தியாசமான முறையில செஞ்சு அசத்தலாம் இது வீடியோ பதிவாக பார்க்க கீழே இருக்கும் லிங்க் செக் செய்து பாருங்க

https://youtu.be/B3jesSF46iA

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 12 சப்பாத்தி
  2. 4 முட்டை
  3. 1 கப் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம்
  4. 2கேரட் பொடியாக நறுக்கியது
  5. 3 தக்காளி பொடியாக நறுக்கவும்
  6. 2நறுக்கிய பச்சைமிளகாய்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  9. 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1/2 ஸ்பூன் மல்லித்தூள்
  11. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  12. உப்பு தேவையான அளவு
  13. 200 மில்லி கடலெண்ணெய்
  14. 1 ஸ்பூன் கடுகு
  15. 1 ஸ்பூன் சோம்பு
  16. கொத்தமல்லி தழை சிறிது

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் கூட இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் மல்லித்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் உப்பு சேர்த்து வதக்கவும் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்

  3. 3

    பின் நறுக்கிய சப்பாத்தி சேர்த்து மசாலா உடன் சேர்த்து நன்கு வதக்கவும் பின் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும்

  4. 4

    மசாலா உடன் சேர்ந்து வெந்து சுருண்டு வரும் போது நன்கு கொத்தி விடவும் பின் இறக்கி கொத்தமல்லி தழை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்

  5. 5

    சுவையான முட்டை சப்பாத்தி ரெடி விரும்பிய காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes