முடக்கத்தான் கீரை தொக்கு.. (Mudakkaththaan keerai thokku recipe in tamil)

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#leaf - முடக்கத்தான் கீரை நிறைய மருத்துவ குணம் நிறந்தது . கால், மூட்டு, இடுப்பு, எலும்பு சம்பந்தமான வலிகளுக்கு தைலமாகவும், அதேபோல் பலவிதமாக சமையல் சமைத்தும் சாப்பிடலாம்...நான் இங்கே ருசியான தொக்கு செய்திருக்கிறேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் முடக்கத்தான் கீரை
  2. 2டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  3. 1ஸ்பூன் மிளகு
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. 1ஸ்பூன் சீரகம்
  6. 1/4 கப் சின்ன வெங்காயம்
  7. 6பல் பூண்டு
  8. 2டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் முடக்கத்தான் கீரையை கழுகி சுதமாக எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    ஸ்டவ்வில் ஒரு வாணலி வைத்து 1ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், உளுத்தம்பருப்பு, மிளகு, சேர்த்து வறுத்து, அத்துடன் புளியை சேர்த்து வறுத்து எடுத்து ஆற விட்டுடவும்.

  3. 3

    அதே வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி முடக்கத்தான் கீரை சேர்த்து நன்றாக வதக்கி, நன்றாக வெந்து வதங்கி வரும்போது எடுத்து ஆற விட்டுக்கவும்

  4. 4

    அதே வாணலியில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் வத்தல் சேர்த்து அதில் பூண்டு, வெங்காயம் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி கொஞ்சம் தண்ணி ஊற்றி வேக விடவும்

  5. 5

    வறுத்து வெச்சிருக்கும் மிளகு உளுத்தம்பருப்பை மிக்ஸியில் பொடிசெய்து, அத்துடன் வதக்கி வைத்திருக்கும் முடக்கத்தான் கீரை சேர்த்து தண்ணி விடாமல் அரைத்து க்கவும்

  6. 6

    அரைத்த விழுதை பூண்டு வெங்காயத்துடன் சேர்த்து தேவையான உப்பு, பெருங்காயம்,எண்ணெய் சேர்த்து நன்கு வதக்கி ஈரம் இல்லாத்த கண்ணாடி ஜாரில் எடுத்து வைத்துக்கவும்.. சாதத்துடன் பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்...எலும்பு வலுவடைய உதவுகிறது.... 10நாள் வரை பிரிட்ஜில் வைத்து யூஸ் பண்ணலாம்..சுவைமிக்க முடக்கத்தான் தொக்கு தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes