முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)

Chitra Kumar
Chitra Kumar @cook_16899134

#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2மணி
5 பரிமாறுவது
  1. கால் கிலோபாசிப் பயறு
  2. உப்பு சிறிது
  3. ஒரு கப்பொடியாக நறுக்கிய வெங்காயம்
  4. 5காய்ந்த மிளகாய்
  5. தேங்காய் துருவல் ஒரு கப்
  6. கடுகு உளுந்து சீரகம் ஒரு ஸ்பூன்
  7. இரண்டு கரண்டிஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1/2மணி
  1. 1

    பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து ஒரு துணியில் கட்டி இரண்டு நாட்கள் வைத்தால் நன்கு முளை கட்டி விடும் இதை பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளலாம் தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்தலாம்

  2. 2

    குக்கரில் பாசிப்பயறை போட்டு பாதி அளவு உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வைத்து இறக்கவும் உப்பு போட்டு வேக வைப்பதால் குழைந்து போகாது
    உப்பு போட மறந்தா ஒரு விசில் வைத்து இறக்கவும் இட்லி சட்டியில் இட்லி அவிப்பது போல் வைத்து வேக வைத்தும் செய்யலாம்

  3. 3

    தண்ணீர் இருந்தால் வடிகட்டி எடுக்கவும் அந்தத் தண்ணீரை வீணாக்காமல் சிறிது சர்க்கரை போட்டு குடித்தால் மிகவும் நல்லது

  4. 4

    தவாவில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து தேங்காய் துருவலை போட்டு வதக்கி வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து பிரட்டி எடுக்கவும் சிறிது சோம்பு தூள் மிளகுத்தூள் விருப்பம் என்றால் சேர்க்கலாம்

  5. 5

    சூடான சுவையான சுண்டல் தயார் காலை உணவாக கூட ஒரு கப் சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்துவிடும் மாலை நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Chitra Kumar
Chitra Kumar @cook_16899134
அன்று

Similar Recipes