கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️

#goldenapron3 #carrot #book
கொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #book
கொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் இரவே கொண்டைக்கடலையை தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். குறைந்தது எட்டு மணி நேரம் ஊறட்டும்.மறுநாள் ஊறவைத்த கொண்டைக்கடலையை குக்கரில் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 5 விசில் விடவும். வெந்துவிட்டதா என்று பார்த்துக் தண்ணீர் வடித்து கொள்ளவும். பொடியாக ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். 3 பச்சை மிளகாய், இஞ்சித் துண்டுகள், துருவிய தேங்காய், பெருங்காயத்தூள்,ஒரு வரமிளகாய் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுத்தம்பருப்பு, மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்குவதக்கிக் கொள்ளவும். அதனுடன் வெந்த சுண்டலை சேர்த்துக் கொள்ளவும். அரைத்து வைத்த தேங்காய் விழுதையும் பிறகு சேர்க்கவும்.
- 3
ஒரு நிமிடம் நன்கு இவற்றை கிளறி, ஒரு மூன்று நிமிடம் மூடி வைக்கவும். பிறகு துருவிய கேரட் 3 ஸ்பூன், 3 ஸ்பூன் நறுக்கிய மாங்காய் துண்டுகள் கருவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறி விடவும். சுவையான பீச்சில் விற்கப்படும் மசாலா சுண்டல் தயார். மாலை நேர ஸ்நாக்ஸாக குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸாக இதைக் கொடுக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீச் சுண்டல்
#vattaram1 Chennai அக்கா தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்...sir தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்....இது சென்னை மெனினா பீச்சில் ஒலிக்கும் பிரபலமான குரல்...எத்தனை சுவை மிகுந்த தீனிகள் விற்றாலும் இந்த சுண்டல் தான் மெரினா பீச்சிற்கு பெருமை சேர்க்கும் குரல். நான் இன்று வட்டார போட்டிக்காக இதை செய்தேன்.அப்படியே அச்சு அசலாக பீச் சுண்டல் சுவையை அளித்தது.நாங்கள் ருசித்து இதை சாப்பிட்டோம்.மெரினா பீச்சிர்க்கே சென்று வந்த புதிய அனுபவம்.கிழே செய்முறை தந்துள்ளேன் படித்து பார்த்து நீங்களும் செய்து எல்லாரும் சாப்பிட்டு மகிழுங்கள். Meena Ramesh -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
தேங்காய்,மாங்காய், பட்டாணி பீச் சுண்டல் (Beach Sundal)
சென்னை என்றால் பீச்.பீச் என்றால் சுண்டல். இங்கு பதிவிட்டுள்ளது, தேங்காய், மாங்காய் ,பட்டாணி சுண்டல். அனைவரும் விரும்பி சுவைக்கும் ஒரு சென்னை பீச் சுண்டல்.#Vattaram Renukabala -
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
காரச் சட்னி
#கோல்டன் அப்ரான் 3 (spicy)#book செட்டிநாட்டு சட்னி, என் தோழியிடம் இருந்து தெரிந்துகொண்டது. என் கணவருக்கு மிகவும் பிடித்த சட்னி. Meena Ramesh -
கம்பு சுண்டல் (Kambu sundal recipe in tamil)
சத்து நிறைந்த குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியான ஒரு சுண்டல்Udayabanu Arumugam
-
கம்பு சுண்டல்
புரதசத்து நிறைந்தது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு சுண்டல் வகை#houze_cook Udayabanu Arumugam -
-
52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது. Chitra Gopal -
பாகற்காய் பொரியல்
#bookபாகற்காய் கசக்கும் என்றாலும், உடல் நலத்துக்கு மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிக மிக நல்லது. வயிற்றில் பூச்சித் தொந்தரவு இருந்தாலும் பாகற்காயை சாப்பிட்டால் சரியாகிவிடும். Meena Ramesh -
மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும். ஒSubbulakshmi -
பீச் ஸ்டைல் தேங்கா மாங்கா சுண்டல்
# vattaramபொதுவாக சென்னை என்றால் பீச் மிகவும் சிறப்புமிக்கது சென்னை செல்லும் எல்லோரும் சுண்டல் வாங்கி சாப்பிடுவது வழக்கம் அதனால் அதற்கு பீச் சுண்டல் என்ற பெயர் வந்தது அந்த வகையில் நான் சென்னை பீச் சுண்டல் ஸ்டைலில் வீட்டில் தேங்கா மாங்கா சுண்டல் தயாரித்துள்ளேன் மிகவும் அருமையாக இருந்தது Gowri's kitchen -
-
-
நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல் -- கடலைபருப்பு சுண்டல்
கடலைப்பருப்பு ஊறப்போட்டு நன்றாக வேவிடவும்உப்பு தேவையான அளவு போடவும். கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து தேங்காய் பூ போடவும்.நாங்கள் வயதானவர்கள் என்பதால் தேங்காய் போடுவதில்லை. ஒSubbulakshmi -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
மாங்காய்தேங்காய்சட்னி
#Mangoஇப்ப மாங்காய் நல்ல சீசன்.மாங்காய், மாம்பழம் ஆரோக்கியத்திற்கு நல்லது. SugunaRavi Ravi -
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
சுண்டல் குழம்பு
அரைத்த மசாலாவில் செய்த சுவையான கருப்பு சுண்டல் குழம்பு.. நிறைய புரோட்டின் சத்து நிறைந்தது கருப்பு சுண்டல். Hemakathir@Iniyaa's Kitchen -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
தக்காளி பீட்ரூட் மாங்காய் சட்னி(Tomoto, beetroot, and raw mango chutney)
#cf4குழந்தைகள் விரும்பும் வகையில், கண்களை கவரும் வகையில், சுவையில் மிஞ்சும் வகையில், அதேசமயம் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வகையில் ஒரு சுவையான ரெட் கலர் சட்னி. எப்படி இருக்குமோ என்று முயற்சி செய்து பார்த்தேன் மிக மிக அருமையாக இருந்தது. சூடான இட்லிக்கு இன்று காலை சுவையான சட்னி அருமையாக அமைந்தது. தாங்களும் தங்கள் வீட்டில் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவைத்து மகிழும் வகையில் ஒரு முறை செய்து பாருங்கள். நன்றி இங்கனம் மீனா ரமேஷ். Meena Ramesh -
-
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
-
சென்னா மசாலா 😍
#immunity #bookபூரி சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள தகுந்த கிரேவி மட்டுமல்லாமல் கொண்டைக்கடலை சேர்த்து செய்வதால் இது மிகவும் சத்தானதும் கூட. மேலும் இதில் இஞ்சி பூண்டு மஞ்சள் தூள் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவாகும்.💪.மிகவும் சுவையான சைடு டிஷ் ஆகும்😋 Meena Ramesh
More Recipes
கமெண்ட்