முளைகட்டிய பயறு சுண்டல்
சமையல் குறிப்புகள்
- 1
பச்சை பயறை ஆறு மணி நேரம் வரை ஊறவிட்டு களைந்து சுத்தமான மஸ்லின் துணியில் கட்டி முடிபோட்டு சமையல் அறையில் வெயில் படுமாறு 12 மணி நேரம் வரை வைத்தாள் நன்கு முளைத்து வரும்
- 2
முளைகட்டிய பச்சை பயறை சிறிது உப்பு சேர்த்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும் உருளைக்கிழங்கை உப்பு சேர்த்து வேக வைத்து பொடித்து கொள்ளவும் மசிக்க கூடாது மிருதுவாக உதிர்த்து வைக்கவும்
- 3
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் கேரட் ஐ துருவி வைக்கவும் வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும் வெங்காயம் கேரட் தேங்காய் துருவல் கொத்தமல்லி தழை ஆகியவற்றில் இருந்து சிறிதை தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடிக்க விடவும் பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
- 5
பின் துருவிய கேரட் சேர்த்து வதக்கவும் இரண்டு நிமிடம் கழித்து வேகவைத்த முளைகட்டிய பச்சை பயறு மற்றும் உதிர்த்த உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும்
- 6
பின் சிறிது உப்பு சேர்த்து முளைகட்டிய பச்சை பயறு மற்றும் உருளைகிழங்கில் ஏற்கனவே உப்பு சேர்த்து வேகவைத்திருப்பதால் கவனமாக சிறிது மட்டும் சேர்த்து அடுப்பை மெல்லிய தீயில் வைத்து இரண்டு நிமிடம் வரை மூடி வைக்கவும்
- 7
பின் லெமன் சாறு,மிளகுத் தூள்,சாட் மசாலா தூள்,மற்றும் தேங்காய் துருவல், சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்
- 8
பின் பாத்திரத்தில் மாற்றி மேல் சிறிது கேரட் துருவல் கொத்தமல்லி தழை வெங்காயம் பரவலாக போடவும்
- 9
பின் தேங்காய் துருவல் மற்றும் மாதுளை முத்துக்களை பரவலாக போட்டு அலங்கரித்து சூடாக பரிமாறவும்
- 10
ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பச்சை பயறு சுண்டல்
சத்தான சுவையான பச்சை பயறு சுண்டல். வளரிளம் குழந்தைகளுக்கு தர வேண்டிய ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவாகும். Swarna Latha -
-
-
-
-
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்த பாசிப்பயறை முளைக்கட்டுவதன் மூலம் சத்துகள் அதிகரிக்கிறது....அத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் தேங்காயின் சத்தும் இந்த சாலடில்!!! Raihanathus Sahdhiyya -
-
-
-
முளைகட்டிய பயறு வடை / Moong Sprouts vadai Recipe in tamil
#magazine1அதிக சத்துக்கள் நிறைந்த அருமையான ருசியான வடை Sudharani // OS KITCHEN -
Green bean sprouts salad (Green bean sprouts salad Recipe in Tamil)
#nutrient3 முளைகட்டிய பச்சைப் பயிரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. BhuviKannan @ BK Vlogs -
முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)
#Jan1 இந்த சுண்டல் பாசிப்பயறில் செய்வதால் உடலுக்கு மிகவும் நல்லது ஆட்டு இறைச்சி கோழி இறைச்சியில் உள்ள சத்து முளைக்கட்டிய பாசிப்பயிறு 100 மடங்கு உள்ளது எலும்பு முறிவு உள்ளவர்கள் எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் இது போல் செய்து சாப்பிட்டால் எலும்பு பலம் பெறும் அடிபட்ட உள்காயங்கள் சளித்தொல்லை நீங்கும் Chitra Kumar -
-
-
-
-
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
-
மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
More Recipes
கமெண்ட் (2)