வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

எங்கள் கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். சென்னையில் இருக்கும் என் சகோதரிக்கு வால்நட் அனுப்புவேன். தினமும் வால்நட் சும்மாவே சாப்பிடுவேன். இட்லி மாவு எப்பொழுதும் என் வீட்டில் இருக்கும், அரிசி, உளுந்து, வெந்தயம், ஓட்ஸ் சேர்ந்த இட்லி மாவு. அதனுடன் பொடித்த வால்நட், பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு பொடி சேர்த்து இட்லி செய்தேன். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், ஒமேகா 6 சேர்ந்த சுவை நிறைந்த இட்லி. சுவையோ சுவை. #walnuts

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 6 கப் இட்லி மாவு
  2. 1 கப் பொடி செய்த வால்நட்
  3. 1 தேக்கரண்டி பச்சைமிளகாய், துருவியது
  4. 1 தேக்கரண்டி இஞ்சி, துருவியது
  5. ½ தேக்கரண்டி மிளகு பொடி
  6. தேவையானஎண்ணை
  7. தேவையானஉப்பு
  8. இட்லி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்

  2. 2

    புளித்த இட்லி மாவுடன் எண்ணையை தவிர மீதி பொருட்களை கலந்து கொண்டேன். இட்லி தட்டில் உள்ள குழிகளில் எண்ணை தடவி ½ தேக்கரண்டி வால்நட் துண்டுகள் போட்டு, அதன் மேல்
    மாவு ஊற்றுக, முழுக்க நிறப்பாதீர்கள்

  3. 3

    இட்லி குக்கரில் போதுமான நீர் ஊற்றி அடுப்பின் மேல் ஹை வ்லேமில் (high flame) வைக்க. நீர் கொதித்ததும் இட்லி ஸ்டண்ட் அதில் வைத்து மூடுக. வெந்த வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. சில நிமிடங்கள் கழித்து திறந்து குச்சியால் இட்லியை குதிப்பார்க்க. நன்றாக வெந்திருந்தால் குச்சி சுதமமாக இருக்கும். ஆறின பின் இட்லிகளை வேறொரு பாத்திரத்தில் போடுக. 16 இட்லிகள் செய்தேன்.
    சாஃப்ட் ஆன ருசியான சத்தான இட்லிகள் ருசிக்க தயார்.

  4. 4

    நான் செய்த மிளகாய் பொடி பருப்புகள், வால்நட், எள், பிளாக்ஸ் சீட், மிளகு, மிளகாய் பொடி கலந்தது. எனக்கு இட்லி கூட மிளகா பொடி சேர்த்து சாப்பிட பிடிக்கும். சுவை அதிகமாக இருந்தாலும், இட்லி சிறிது பிரவுன் ஆக இருக்கும். அதனால் காஷ்மீரி மிளகாய் பொடியுடன், நான் செய்தி மிளகாய் பொடியும் நல்லெண்ணையும் கலந்து இட்லிகள் மேல் தடிவினேன். உணவு கண்களுக்கும் விருந்தாக இஎஊக்க வேண்டும். சிகப்பு போட்டோவிலும் அழகாய் தெரியும்
    எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பார

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes