கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#Ownrecipe
அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்

கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)

#Ownrecipe
அல்வா என்றால் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அதை நாம் வீட்டில் செய்யும் பொழுது சுத்தமாகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
8 பேர்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. இரண்டரை கப் சீனி
  3. அரை கப் நெய்
  4. ஃபுட் கலர் சிறிதளவு
  5. ஒரு பின்ச் உப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    ஒரு கப் கோதுமை மாவை எடுத்து 5 கப் தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாகக் கரைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    அடி கனமான இரும்பு வாணலியை எடுத்து நன்றாக சூடு செய்து அதில் கரைத்து வைத்துள்ள கோதுமை மாவை ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்

  4. 4

    மாவு கட்டு பதம் வரும்போது சிறிதளவு நெய் சேர்த்து கிளறவும் மற்றும் ஒரு பின்ச் உப்பு சேர்த்துக்கொள்ளவும்

  5. 5

    மாவு நன்கு கெட்டி பதம் வந்தவுடன் சர்க்கரையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்றாக கிளறவும்

  6. 6

    ஒரு பேனில் 2 நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளவும்

  7. 7

    பின்பு அதே பேனில் 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கேரமல் செய்து அல்வா உடன் சேர்த்து நன்றாக கிளறவும்

  8. 8

    பின்பு வறுத்து வைத்த முந்திரிப் பருப்பு மற்றும் ஃபுட் கலரை சேர்த்து நன்றாக கிளறவும் தேவைப்பட்டால் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்

  9. 9

    இப்போது சுவையான கோதுமை மாவு அல்வா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
அன்று

Similar Recipes