சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடான பின் முந்திரி பருப்பு, உலர் திராட்சை சேர்த்து பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்.
- 2
வதங்கிய முந்திரி பருப்பு, உலர் திராட்சையை வேறு பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- 3
பின்பு ஒதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும்
- 4
அரிசியை நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு பின்பு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 5
பின்பு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது கொதி வந்ததும் ஊற வைத்த அரிசி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சிறிது உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அரிசியை வேக வைக்கவும்.
- 6
அரிசி முக்கால் பதத்திற்கு வெந்தவுடன் தண்ணீரை வடிகட்டவும்
- 7
மிக்ஸி ஜாரில் பூண்டுபற்கள், இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.
- 8
ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரக தூள், கரம் மசாலா தூள் மற்றும் வேகவைத்த முட்டை சேர்த்து நன்கு கிளறி 20 நிமிடம் ஊற வைக்கவும்.
- 9
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடான பின் நெய், எண்ணெய் ஊற்றவும்.
- 10
பின்பு பிரியாணி இலை, கருவேப்பில்லை வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 11
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 12
பின்பு அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறி நன்கு வதக்கவும்.
- 13
இதனுடன் ஊற வைத்துள்ள முட்டை கலவையை சேர்த்து கிளறி 10 நிமிடம் மிதமான சூட்டில் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 14
பின்பு கொத்த மல்லி இலை, புதினா இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
- 15
ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வேக வைத்த சோறு பாதி அளவிற்கு சேர்க்கவும்.
- 16
அதன் பின் வதக்கிய முட்டை கலவையை சேர்க்கவும். அதன் மேல் மீதமுள்ள நெய் மற்றும் சாதத்தை சேர்க்கவும்.
- 17
இதன் மேல் பொன்னிறம் ஆன முந்திரி பருப்பு, உலர் திராட்சை மற்றும் வெங்காயத்தை தூவி விடவும்.
- 18
பின்பு அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் பிரியாணியை தம்மில் வைக்கவும்.
- 19
தம்மில் பிரியாணி தயார் ஆனதும் அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்
- 20
சுவையான முட்டை பிரியாணியை தயிர் பச்சடி மற்றும் கத்தரிக்காய் தொக்குடன் பரிமாறலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பாம்பே சட்னி- வெங்காயம், கடலை மாவு சட்னி (vengayam, kadalai maavu chutni recipe in Tamil)
#goldenapron3#கிரேவி#book Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்