தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் கருப்பு கொண்டை கடலை
  2. 3 காய்ந்த மிளகாய்
  3. இரண்டு பச்சை மிளகாய்
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 12 பல் பூண்டு
  6. ஒரு ஸ்பூன் சோம்பு
  7. தேவையானஅளவு உப்பு
  8. தேவையானஅளவு தண்ணீர்
  9. சமையல் எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கருப்பு கடைகளிலேயே கல் இல்லாமல் சுத்தம் செய்து 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்

  2. 2

    ஊற வைத்த கொண்டக்கடலையை மற்றும் தேவையான பொருட்களை எடுத்து வைக்கவேண்டும் வெங்காயம் ஆறு பல் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்

  3. 3

    மிக்ஸி ஜாரில் ஊற வைத்த கொண்டைக்கடலை சோம்பு தோலுடன் 6 பல் பூண்டு 3 காஞ்ச மிளகாய் தேவையான உப்பு சேர்த்து லேசாக கொரகொரப்பாக இருக்குமாறு அரைத்து எடுக்கவும்

  4. 4

    அரைத்த கலவையுடன் நறுக்கிய வெங்காயம் பூண்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து உப்பு தேவை ஏற்படின் உப்பு கலந்து நன்கு பிசையவும்

  5. 5

    பிசைந்த மாவு கலவையை உருண்டைகளாக உருட்டி வடைகளாகத் தட்டி அடுப்பில் எண்ணெயை காய வைத்து வடைகளை போட்டு இரண்டு புறமும் நன்கு திருப்பி போட்டு வேக வைத்து பொரித்தெடுக்கவும்

  6. 6

    உடம்புக்கு ஹெல்தியான கருப்பு கொண்டைக்கடலை வடை குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes