தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 400 கிராம் காளான்
  2. 3 வெங்காயம்
  3. 4 தக்காளி
  4. 3 பச்சை மிளகாய்
  5. 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1_1/2 ஸ்பூன் தனியாத்தூள்
  8. 1/2 ஸ்பூன் சீரகத்தூள்
  9. 1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
  10. 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. கல் உப்பு தேவையான அளவு
  12. கறிவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது
  14. 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  15. 4 ஸ்பூன் நெய்
  16. 1 ஸ்பூன் கடுகு
  17. 1 ஸ்பூன் சோம்பு
  18. மசாலா அரைக்க:
  19. 1 கப் தேங்காய் துருவல்
  20. 2 டேபிள்ஸ்பூன் கசகசா
  21. 10 பல் பூண்டு
  22. இஞ்சி சிறிய துண்டு
  23. 15 பல் முந்திரி

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    அடி கணமான வாணலியில் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் நறுக்கி அலசிய காளான் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பின் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி மூடி வைக்கவும் தண்ணீர் ஊற்ற வேண்டாம் காளான் வேக வேக அதுவே தண்ணீர் விடும் அவ்வப்போது திறந்து நன்றாக கிளறி விடவும்

  3. 3

    காளான் பாதி வெந்ததும் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து நன்கு கிளறி விடவும்

  4. 4

    பின் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் கசகசா மற்றும் முந்திரி ஐ வெதுவெதுப்பான நீரில் அரை மணி நேரம் வரை ஊறவிடவும் பின் தேங்காய் துருவல் இஞ்சி பூண்டு உடன் ஊறவைத்த கசகசா முந்திரி ஐ சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும் பின் வெந்த காளான் உடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்து திக்கானதும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

  5. 5

    சுவையான காளான் கிரேவி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes