எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
இரண்டு பேர்
  1. ஒன்றரை கப் கோதுமை மாவு
  2. அரை டீஸ்பூன் உப்பு
  3. மாவு பிசைய தேவையான தண்ணீர்
  4. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  5. இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    ஒரு பேசினில் மாவு உப்பு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

  3. 3

    இப்பொழுது அதை பெரிய உருண்டைகளாக உருட்டி மெலிசாக தேய்த்து அதன் மேல் நெய் தடவி மடிப்பு மடிப்பாக மடித்து உருட்டி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அந்த உருண்டைகளை எடுத்து லேசாக மாவு போட்டு பிரட்டி கையால் லேசாக தட்டலாம் அல்லது கத்திக்கொண்டு கோடு கோடாக போட்டு மடித்து அதை உருட்டி சப்பாத்தி குழவி கொண்டும் இடலாம்.

  5. 5

    இப்பொழுது பரோட்டாவை சப்பாத்தி கல்லில் போட்டு இரண்டு பக்கமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கலாம்.

  6. 6

    சூடாக அதை எடுத்து நன்கு இரண்டு கைகளால் அழுத்திவிட்டால் பரோட்டா பதத்திற்கு வரும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Meenakshi Ramesh
அன்று

Similar Recipes