புளியோதரை (Tamarind rice)

காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.
#Vattaram
புளியோதரை (Tamarind rice)
காஞ்சிபுரம் கோவிலில் கொடுக்கும் புளியோதரை மிகவும் சுவையான இருக்கும். அதே போன்ற புளியோதரையை நீங்கள் விருப்பப்படும் போது வீட்டிலேயே தயார் செய்து சுவைக்க இங்கு பதிவிட்டுள்ளேன்.
#Vattaram
சமையல் குறிப்புகள்
- 1
புளியை கெட்டியாக கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
மேலே கொடுத்துள்ள வறுத்து பொடிக்கும் பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எல்லாப் பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 4
சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து எடுக்கவும்.
- 5
வேறு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து சூடானதும் கடுகு, உளுந்து,கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,வேர்க்கடலை,முந்திரி,வற்றல் மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 6
பின்னர் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
அதன் பின் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 8
உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.
- 9
அரிசியை உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளவும்.
- 10
ஒரு அகலமான பாத்திரத்தில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து,அதில் தயாராக வைத்துள்ள புளியோதரை கலவையை சேரத்து நன்கு கலக்கவும்.
- 11
இப்போது மிகவும் சுவையான கோவிலில் கிடைக்கும் புளியோதரை தயார்.
- 12
தயாரான புளியோதரையை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இப்போது மிகவும் சுவையான கோவில் புளியோதரை வீட்டிலேயே சுவைக்கத்தயார்.
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (9)