எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. சின்ன வெங்காயம் 100 கிராம்
  2. 10 பல் பூண்டு
  3. 2 துண்டு இஞ்சி
  4. புதினா கொத்தமல்லி கொஞ்சம்
  5. சீரகசம்பா 1/2 கிலோ
  6. 100 கிராம் தயிர்
  7. 2பட்டை 2 கிராம்பு 2ஏலக்காய் 1 பிரிஞ்சி ஜாதிக்காய் சின்ன துண்டு
  8. 4 பச்சை மிளகாய்
  9. 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  11. 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 10 முந்திரி பருப்பு

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் கறி சுத்தம் செய்து கழுவி அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து ஒரு குக்கரில் 5 வீசில் வேக வைக்கவும்

  2. 2

    பிறகு வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

  3. 3

    பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பட்டை கிராம்பு ஏலக்காய் முந்திரி பருப்பு ஜாதிக்காய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    ஒரு கடாயில் காய்ந்ததும் நெய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும் பிறகு அரைத்த பட்டை கிராம்பு ஏலக்காய் போடவும்

  6. 6

    நன்கு வதக்கிய பிறகு வேக வைத்து எடுத்த மட்டன் தண்ணீர் இல்லாமல் சேர்த்து கொள்ளவும்

  7. 7

    பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்

  8. 8

    நல்ல வதக்கிய பிறகு அதில் கொத்தமல்லி புதினா இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்

  9. 9

    நன்கு வதக்கிய பிறகு அதில் 1 எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்

  10. 10

    பிறகு அதில் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்

  11. 11

    மட்டன் வேக வைத்த தண்ணீர் ஊற்றி கொள்ளவும் 1கப் அரிசிக்கு 2கப் தண்ணீர் வீதம் தண்ணீர் ஊற்றவும்

  12. 12

    நல்ல கொதித்த பிறகு அதில் அரிசி சேர்த்து கொள்ளவும் அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்

  13. 13

    அப்ப அப்ப கொஞ்சம் கின்டி விடவும். அடுப்பில் தீ மிதமான தீயில் வைத்து விட்டு வேக வைக்கவும்

  14. 14

    நல்ல தண்ணீர் எல்லாம் வற்றிய பிறகு அதை தம் வைக்கவும் தம் வைக்க தோசை கல் வைத்து அதற்கு மேல் சட்டி வைத்து வைக்கவும்

  15. 15

    ஒரு 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வைக்கவும்

  16. 16

    15 நிமிடம் கழித்து அதை திறந்து பார்க்கவும். சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
அன்று

Similar Recipes