தக்காளி பச்சடி (Tomato gravy)🍅☘️🍅☘️🍅☘️👌👌👌

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#kavitha
ருசியான சூப்பரான தக்காளி பச்சடி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தேவைக்கேற்ப மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் நமது ருசியான சுவையான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு தக்காளி பச்சடி தயார்👍

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 2 ஸ்பூன்சமையல் எண்ணெய்
  2. 1/2 டீஸ்பூன்கடுகு,கடலை பருப்பு,சீரகம்
  3. 4 பீஸ்பூண்டு பற்கள்
  4. 2வரமிளகாய்
  5. 6தக்காளி
  6. தேவையான அளவுகறிவேப்பிலை
  7. 1/4 டீஸ்பூனமஞ்சள்தூள்
  8. 2 டீஸ்பூன்சாம்பார் தூள்
  9. தேவையான அளவுஉப்பு
  10. 2பெரிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப் பருப்பு, சீரகம் சேர்த்து பொரிய விடவும்.

  2. 2

    பின் கறிவேப்பிலை நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் அனைத்தையும் சேர்க்கவும்.

  3. 3

    பெரிய வெங்காயம் அனைத்தும் நன்கு வதங்கியதும் தக்காளியை சேர்க்கவும். தக்காளி நன்கு வதங்கியதும் சாம்பார் தூள் சேர்க்கவும்.

  4. 4

    சாம்பார் தூள் சேர்த்ததும் பின் மஞ்சள் தூள் சேர்த்து அனைத்தையும் நன்கு வதக்கி விடவும். அனைத்தும் நன்கு வதங்கியதும் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் ஊற்றவும்.

  5. 5

    தண்ணீர் ஊற்றியதும் மூடி போட்டு தக்காளியை வேக விடவும்.

  6. 6

    தக்காளி வெந்த பின் மூடியை நீக்கி தக்காளியை நன்கு கலந்து விடவும். நமது சுவையான தக்காளி பச்சடி தயார்👌👌

  7. 7

    சுவையான😋 தக்காளி பச்சடி சப்பாத்தி, இட்லி, தோசைக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes