ஸ்பைசி அவல் பால்ஸ்

#colours1 - அவலை வைத்து கார சாரமாக எல்லோரும் விரும்பும் விதத்தில் வித்தியாசமான அருமையான சுவையில் அவல் பால்ஸ்.....
ஸ்பைசி அவல் பால்ஸ்
#colours1 - அவலை வைத்து கார சாரமாக எல்லோரும் விரும்பும் விதத்தில் வித்தியாசமான அருமையான சுவையில் அவல் பால்ஸ்.....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவலை தண்ணீரில் 10- 15 நிமிடம் ஊராவிட்டு, நன்றாக பிழிந்து 1/4 கப் எடுத்து விட்டு மீதி அவலை மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கட்டியாக அரைத்து எடுத்துக்கவும்
- 2
அரைத்த அவலை எடுத்து வைத்திருக்கும் 1/4 கப் அ வலுடன் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து பிசைந்து வெச்சுக்கவும்
- 3
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு 1ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலிப்பருப்பு, வரமிளகாய் சேர்த்து வறுத்துக்கவும்
- 4
அத்துடன் கறிவேப்பிலை, நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் பாதி சேர்த்து, ஓரளவு நன்கு வதங்கியதும் எடுத்து பிசைந்து வைத்திருக்கும் மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்துக்கவும்
- 5
கையில் எண்ணெய் தடவி பிசைந்து வைத்திருக்கும் அவல் கலவையை சின்ன பால்ஸ் செய்து இட்லி பாத்திரத்தில் வைத்து 5-7 நிமிடம் வேக விட்டு எடுத்து ஆற விடவும்
- 6
வாணலியை ஸ்டவ்வில் வைத்து 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து எடுத்து வைத்திருக்கும் மீதி வெங்காயம் சேர்த்து அத்துடன் தக்காளி பியுரி சேர்த்து, மிளகாய்த்தூள், இதுக்கு தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
- 7
தக்காளி வதங்கி சேர்ந்தப் போல் வரும்போது ஆற வைத்து வெச்சிருக்கும் அவல் பால்ஸ் சேர்த்து நன்கு கிளறி மேலே மல்லி இலை தூவி ஸ்டாவ்வ் ஆப் செய்து எடுத்து சேர்விங் பவுளுக்கு மாத்திவிடவும்
- 8
அருமையான சிவப்பு நிற த்துடன் மிக வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த அவல் பால்ஸ்.. குழைந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.. உடலுக்கு ஆரோக்கியமானதும் கூடே...செய்து பார்த்து ருசிக்கவும்.. பகிரவும்...
Similar Recipes
More Recipes

























கமெண்ட்