எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 பேர்
  1. 5 கொத்து கொத்தமல்லி
  2. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை
  3. 2 தக்காளி
  4. 4பெரிய வெங்காயம்
  5. 4 பச்சை மிளகாய்
  6. ஒரு ஸ்பூன் பெருங்காயத் தூள்
  7. 6 ஸ்பூன் தேங்காய் துருவல்
  8. சிறிதளவு புளி
  9. ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு
  10. ஒரு ஸ்பூன் கடுகு
  11. ஒரு ஸ்பூன் உளுந்து
  12. தேவையான அளவு உப்பு
  13. சிறிதளவு இஞ்சி

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருளை எடுத்துக் கொண்டு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்தவுடன் கடுகு சேர்க்கவும்.

  2. 2

    பின் உளுந்து, கடலை பருப்பு சேர்த்து தாளித்து ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.

  3. 3

    அதோடு பொடியாக நறுக்கிய இஞ்சி, 4 பச்சை மிளகாயை கீரி போடவும். ஒரு பிடி கறிவேப்பிலை சேர்க்கவும்.

  4. 4

    அதோடு இரண்டு தக்காளி, 4 பெரிய வெங்காயம், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    கடைசியாக ஒரு பின்ச் புளி சேர்த்து, கொத்தமல்லி இலை, 6 ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

  6. 6

    அடுப்பை அணைத்து, வதக்கிய கலவையை சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும். வேண்டுமானால் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளலாம். பின் ஒரு பாத்திரத்தில் பரிமாறவும். சுவையான கொத்தமல்லி துவையல் ரெடி🍀🍀🍀

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes