வல்லாரை கீரை துவையல்

Sudha Rajendran
Sudha Rajendran @Rasuchennaisamayal

வல்லாரை கீரை மிகவும் சத்து நிறைந்த உணவு வகை..என் அம்மாவின் பாரம்பரிய உணவு ❤️

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1cupவல்லாரை கீரை
  2. 1tbspஉளுந்து
  3. 2பச்சை மிளகாய்
  4. 2காய்ந்த மிளகாய்
  5. 1இஞ்சி துண்டு
  6. 2tbspதேங்காய் துருவல்
  7. 2நெல்லிக்காய்
  8. சிறிதுபுதினா இலை
  9. 1tspபெருங்காய தூள்
  10. 1tspஉப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    கீரையை நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும் (தண்டுகளை நீக்கி விட்டு இலைகளை மட்டும் பயன்படுத்தவும்)

  2. 2

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் உளுந்து, பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.. பிறகு அதை தனியாக வைக்கவும்..

  3. 3

    அதே கடாயில் நெல்லிக்காய் 2 கொட்டைகளை நீக்கி விட்டு பொடியாக அரிந்து போடவும்.. சிறிது புதினா இலை சேர்க்கவும், வல்லாரை கீரை சேர்த்து நன்கு வதக்கவும்..

  4. 4

    இலைகள் சுருங்கும் வரை நன்கு வதக்கவும்

  5. 5

    வதக்கிய அனைத்து பொருட்களை மிக்சியில் போட்டு தேங்காய் துருவல் பெருங்காயம் உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்..

  6. 6

    ஆரோக்கியமான சத்து நிறைந்த அருமையான சுவையில் வல்லாரை கீரை துவையல் தயார்.. சூடான சாதத்துடன் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rajendran
Sudha Rajendran @Rasuchennaisamayal
அன்று

Similar Recipes