சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
பாசிப்பருப்பை 10 நிமிடம் ஊறவைத்து குக்கரில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் சோம்பு,பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
- 4
பிறகு தேங்காய் துருவலை போட்டு ஒரு நிமிடம் வதக்கி பிறகு ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்து கறிவேப்பிலை, பொடியாக வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- 6
பிறகு ஒரு ஸ்பூன் இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
- 7
தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி1டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
- 8
கொதி வந்தவுடன் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு அதில் ஊற்றவும்.
- 9
பாசிப்பருப்பை ஊற்றிய பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கால் ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 10
பிறகு கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். சுவையான கடப்பா தயார். இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக வைத்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
தஞ்சாவூர் ஸ்பெஷல் கடப்பா
#vattaram #week11இந்த கடப்பா ரெசிபி இட்லி , தோசை வியாபம் ஆப்பம் மற்றும் சப்பாத்திக்கு ரொம்பவே பொருத்தமான ஒரு காம்பினேஷன் Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கும்பகோணம் கடப்பா(kumbakonam kadappa recipe)👌👌
#pms family உடன் இணைந்து ருசியான கும்பகோணம் கடப்பா செய்ய முதலில் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து,சீரகம்,கிராம்பு, பட்டை போட்டு வதக்கவும்,பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம்,கருவேப்பிலை, தக்காளி,உப்பு,மஞ்சள் தூள் போட்டு நன்கு வதக்கவும்,பின் தேங்காய்,கசகசா,சோம்பு, பச்சை மிளகாய், பொட்டு கடலை ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வைத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை தோள் நீக்கி மசித்து வைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் இருக்கும் தக்காளி வெங்காயம் வதங்கியதும் பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போக வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி கொதி விட்டு மல்லி இலை தூவி இறக்கவும்.ருசியான கும்பகோணம் கடப்பா தயார்👍 Bhanu Vasu -
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்