சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு இவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். பாசிபருப்பை கழுவி குக்கரில் தண்ணீர் விட்டு வெங்காயம், தக்காளி, கேரட், உருளைக்கிழங்கு சேர்த்து மஞ்சள்தூள் சேர்த்து ஒரு விசில் விட்டு சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்.
- 2
குக்கரில் விசில் போனதும் முக்கால் பதம் வெந்த பருப்பை கரண்டியால் கிளறி வேறு பாத்திரத்தில் மாற்றி சிம்மில் வைக்கவும் .
- 3
தேங்காய் துருவி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும். பூண்டு பல் தோலுரித்து எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முதலில் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும் நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 4
பிறகு பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 5
கடைசியாக சோம்பு கிராம்பு சேர்த்து வதக்கவும். நன்கு சிவக்க வறுக்கவும். பிறகு ஆற விடவும்.
- 6
ஆறியதும் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
- 7
இப்போது சிம்மில் இருக்கும் பருப்பில் உப்பு, மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும். ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்
- 8
பிறகு அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து கிளறி விடவும்
- 9
கொதி வந்ததும் சிம்மில் வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை பூ இலை தாளித்து சோம்பு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொதிக்கும் பாத்திரத்தில் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். இட்லிக்கு நல்ல சைட் டிஷ். வீட்டில் விசேஷங்களுக்கு இந்த கடப்பா ருசியாகவும் இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அடை
#nutrients1எல்லா பருப்பு வகைகளிலும் பொதுவாகவே புரதச் சத்து நிரம்பியுள்ளது. இதனை தினசரி உட்கொண்டாலே தேவையான சத்து கிடைத்துவிடும். அந்த வகையில் இன்று பருப்புகளை பயன்படுத்தி சத்தான ஒரு அடை ரெசிபியை பார்க்கலாம். மேலும் அதனுடன் முருங்கைக்கீரையை சேர்த்து செய்திருப்பதால் மிகுந்த புரதச்சத்து நிறைந்தது Laxmi Kailash -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
*சேப்பங்கிழங்கு மசியல்*
இதில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும், அதிக வலுவை சேர்க்கின்றது. மேலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. Jegadhambal N -
சம்பா நண்டு கிரேவி
#everyday2சம்பா நண்டில் அதிகப்படியான சதை பகுதி இருக்கும் கால்கள் மிகவும் பெரியதாக இருக்கும் மருத்துவ குணம் உள்ள நண்டு Vijayalakshmi Velayutham -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen -
-
-
-
More Recipes
கமெண்ட்