தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்..

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

45நிமிடங்கள்
4நபர்கள்
  1. 1/2கிலோ சிக்கன்
  2. 1/2கிலோ பாஸ்மதி அரிசி
  3. 100கிராம் சாம்பார் வெங்காயம்
  4. 1பச்சை மிளகாய்
  5. 2ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1கைப்பிடி புதினா
  7. 1கைப்பிடி கொத்தமல்லி இலை
  8. 3பட்டை
  9. 4ஏலக்காய்
  10. 4கிராம்பு
  11. 1பிரிஞ்சி இலை
  12. சிறிதளவுஜாதிபத்திரி
  13. 1அன்னாசிப்பூ
  14. சிறிதளவுகல்பாசி
  15. 6டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  16. 1ஸ்பூன் நெய்
  17. 1லிட்டர் தண்ணீர்
  18. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  19. 1ஸ்பூன் மல்லித்தூள்
  20. 1/2ஸ்பூன் சீரகத்தூள்
  21. 2ஸ்பூன் தயிர்
  22. 1/2ஸ்பூன் எலுமிச்சை சாறு

சமையல் குறிப்புகள்

45நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸி ஜாரில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிபத்திரி, அன்னாசிப்பூ, கடல்பாசி எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்

  2. 2

    மிக்ஸி ஜாரில் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்..

  3. 3

    கடாயில் எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  4. 4

    வதங்கியதும் அதனுடன் அரைத்த பொடியையும் சேர்த்து வதக்கவும்.. வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்..

  5. 5

    எல்லாம் நன்றாக வதங்கியதும் சிக்கனை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்

  6. 6

    அதனுடன் தயிர் சேர்த்து வதக்கவும்.. எலுமிச்சைச்சாறு சேர்த்து வதக்கவும்

  7. 7

    வதங்கியதும் சிறிது தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து சிக்கன் அரைப் பதம் வேகும் வரை வேக வைக்கவும்..

  8. 8

    அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்... சிக்கனை பிரியாணி செய்யும் பாத்திரத்தில் மாற்றி சிக்கன், தண்ணீர், அரிசி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க விடவும்..

  9. 9

    தண்ணீர் சிறிது வற்றியவுடன் அதில் புதினாவை தூவி விடவும்... மூடி போட்டு மூடி 20 நிமிடங்கள் வேகவிடவும்... 20 நிமிடம் கழித்து பார்த்தால் பிரியாணி ரெடி ஆகி இருக்கும்..

  10. 10

    இப்போது சுவையான தலப்பாகட்டி பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes