சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 கப்காளான்
  2. 6 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  3. 1 டேபிள் ஸ்பூன்நெய்
  4. 1 கப்சீரக சம்பா அரிசி
  5. 1பட்டை
  6. 3லவங்கம்
  7. 2ஏலக்காய்
  8. 2பிரியாணி இலை
  9. 1ஸ்டார் பட்டை
  10. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  11. 4நறுக்கிய வெங்காயம்
  12. 2தக்காளி
  13. 2பச்சை மிளகாய்
  14. 1 டேபிள் ஸ்பூன்எலுமிச்சம் சாறு
  15. 1 டேபிள் ஸ்பூன்தயிர்
  16. 2 டேபிள் ஸ்பூன்பிரியாணி மசாலா தூள்
  17. -1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய்த்தூள்
  18. உப்பு - தேவையான அளவு
  19. புதினா மற்றும் கொத்தமல்லி இலை

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    காளானை தண்ணீர் மற்றும் மஞ்சள் தூளில் அலசி எடுத்துக்கொள்ளவும்

  2. 2

    சீரக சம்பா அரிசியை தண்ணீரில் நன்றாக கழுவி, பின்னர் அதை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  3. 3

    அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்

  4. 4

    அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், ஸ்டார் பட்டை, பிரியாணி இலை, பச்சை மிளகாய் மற்றும் புதினா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வறுக்கவும்

  5. 5

    இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை எண்ணெயில் வதக்கவும்

  6. 6

    அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வதக்கவும்

  7. 7

    தக்காளி சேர்த்து மிதமான தீயில் நன்றாக 5 நிமிடம் வதக்கவும்

  8. 8

    அடுத்து காளான், பிரியாணி மசாலா, மிளகாய் தூள் மற்றும் தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  9. 9

    ஊற வைத்த அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து கொண்டு பின்னர் அரிசியை குக்கரில் சேர்த்துக் கொள்ளவும்

  10. 10

    1 கப் அரிசிக்கு = 1 1/2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்

  11. 11

    தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொண்டு ஒரு கொதி வந்தவுடன் எலுமிச்சை சாறு மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி கொள்ளவும்

  12. 12

    குறைவான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும் (அல்லது) 20 நிமிடம் தட்டு போட்டு மூடி குறைவான தீயில் வேக வைக்கலாம்

  13. 13

    பின்னர் புதினா இலை தூவி கிளறி இறக்கவும்

  14. 14

    வெங்காயப் பச்சடியுடன் இந்த சீரக சம்பா அரிசி காளான் பிரியாணியை பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sakarasaathamum_vadakarium
அன்று
Chennai , India

Similar Recipes