சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337

#colours3 அனைவரும் விரும்பும் இரும்புச்சத்தை அதிகம் கொண்ட வெள்ளை வண்ண தேங்காய் சட்னி செய்ய முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற சுவையான தேங்காய் சட்னி ரெடி 👌👌👌👌

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
3 பேர்
  1. அரை மூடி சிறிய தேங்காய்
  2. 25 கிராம்பொட்டுக் கடலை
  3. 3பச்சை மிளகாய்
  4. 4 பீஸ்பூண்டு, சிறிய வெங்காயம்
  5. தேவையான அளவுகறிவேப்பிலை, உப்பு
  6. ஒரு ஸ்பூன்சமையல் எண்ணெய்
  7. சிறிதுகடுகு,உழுத்தம் பருப்பு, கடலைபருப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் தேங்காய்,
    பொட்டுக்கடலை,
    பச்சைமிளகாய், பூண்டு,வெங்காயம், உப்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

  3. 3

    இனி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். பின் உளுத்தம் பருப்பு போடவும்.

  4. 4

    பின் அதனுடன் கடலைப் பருப்பு,கறிவேப்பிலை,வரமிளகாய், ஒன்று போட்டு இறக்கவும்.

  5. 5

    பின் தாளித்ததை தேங்காய் சட்னியுடன் சேர்த்து கலந்து விடவும். நமது சுவையான அனைவரும் விரும்பும் வெள்ளை வண்ண தேங்காய் சட்னி தயார் 👍இட்லி, தோசைக்கு சாம்பாருடன் தேங்காய் சட்னி அருமையான காம்பினேஷன்👌👌👌👌 வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👍 நன்றி😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Bhanu Vasu
Bhanu Vasu @cook_29998337
அன்று

Similar Recipes