சுவையான மதுரை தண்ணி சட்னி

இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋
குறிப்பு :
•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்
•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்
•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும்
சுவையான மதுரை தண்ணி சட்னி
இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋
குறிப்பு :
•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்
•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்
•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
4 பூண்டு பற்கள் தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் பொட்டுக் கடலையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
4 சின்ன வெங்காயம், சிறிதளவு புளி சேர்க்கவும்
- 3
பச்சை மிளகாயை கிள்ளி போட்டு, தேங்காயுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 4
தண்ணீர் ஊற்றி நன்றாக வெண்ணெய் போன்று அரைக்கவும்
- 5
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிய விடவும்
- 6
உளுத்தம்பருப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்
- 7
காய்ந்த மிளகாயை கிள்ளி விதையை கொட்டி விட்டு சேர்க்கவும்
- 8
சின்ன வெங்காயத்தை நீட்ட வாகில் நறுக்கி சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்
- 9
கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்க்கவும்
- 10
தண்ணீர் ஊற்றி வெங்காயம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள சட்னி ஊற்றி கலந்து அடுப்பை அனைக்கவும்
- 11
இட்லியில் ஊற்றி பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தண்ணி சட்னி
#vattaram#week5...கட்டி சட்னி ஒரு சுவைனனா, தண்ணி சட்னி வேறொரு விதமான சுவையில் இருக்கும்... இட்லி மேல் ஊத்தி சாப்பிட அருமையாக இருக்கும்... Nalini Shankar -
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #week5மதுரையில் பிரபலமான தண்ணி சட்னி செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
மதுரை தண்ணி சட்னி
#vattaram #Madurai Week5மதுரை ரோட்டோர கடைகளில் கிடைக்கும் தண்ணி சட்னி இட்லிக்கு நல்ல காம்பினேஷன். Nalini Shanmugam -
-
மதுரை ஸ்பெஷல் தண்ணி சட்னி(Madurai Special Thanni Chutney recipe in Tamil)
#vattaram/week 5 / Madurai*மதுரையில் உள்ள பெரும்பாலான உணவகத்தில் பரிமாறபடுவது இந்த தண்ணி சட்னி,இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். kavi murali -
மதுரை ரோட்டுகடை கார சட்னி
#vattaramமதுரையில தள்ளுவண்டி கடையில் ஸ்பெஷலாக செய்யற காரச் சட்னி காரமான சுவையான சட்னி 10 இட்லி கூட பத்தாது. வெங்காயம் தக்காளி நன்றாக வதக்க கூடாது பச்சை வாசனை உடனிருக்க வேண்டும் இதுவே இந்த சட்னியில் தனித்துவம் Vijayalakshmi Velayutham -
-
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
சிம்பிள் கார தண்ணி சட்னி
#vattaram#week5....தண்ணி சட்னி... இந்த கார சட்னி செய்வது மிக சுலபம்... சீக்கிரத்தில் செய்துவிடலாம்... Nalini Shankar -
-
ஹோட்டல் சட்னி
#combo4 ஹோட்டல் சட்னி சீக்ரெட், தேங்காய், பச்சை மிளகாய் நிறையவும், பொட்டு கடலை சிறிதும் சேர்க்கவும். Revathi Bobbi -
சுவையான வெள்ளை வண்ண தேங்காய் சட்னி🥥
#colours3 அனைவரும் விரும்பும் இரும்புச்சத்தை அதிகம் கொண்ட வெள்ளை வண்ண தேங்காய் சட்னி செய்ய முதலில் தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், உப்பு, அனைத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு ,கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, ஒரு வரமிளகாய் போட்டு தாளித்து, பின் அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்ற சுவையான தேங்காய் சட்னி ரெடி 👌👌👌👌 Bhanu Vasu -
-
-
கொத்தமல்லி சட்னி
#pmsfamily இன்று நாம் பாரக்க போகும் கெல்தியான உணவு கொத்தமல்லி சட்னி.இதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி எல்லாமே சிறிதளவு சேர்க்கவும் உழுந்து பூண்டு பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் ஒரு பிடி கொத்த மல்லி இலை தேங்காய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து ஆற வைக்கவும் பிறகு மிக்சியில் அரைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு பட்ட வத்தல் சேர்த்தால் அருமையான கொத்தமல்லி சட்னி ரெடி😊👍 Anitha Pranow -
-
மதுரை தண்ணி சட்னி (Madhurai thanner chutney recipe in tamil)
இந்த சட்னி எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது. இட்லி, தோசைக்கு சூப்பரான சட்னி#GA4Week4Chutney Sundari Mani -
-
ஹோட்டல் ஸ்டைல் தண்ணி சட்னி..(hotel style thanni chutney recipe in tamil)
சுவையான ஹோட்டல் ஸ்டைல் தண்ணீர் மாதிரி தேங்காய் சட்னி#queen2 Rithu Home -
தண்ணி சட்னி
#vattaram5 இந்த தண்ணி சட்னி மதுரையில் மிகவும் பிரபலம். மல்லிகை இட்லிக்கு பொருத்தமான சட்னி ஆகும். எவ்வளவு தண்ணியாக இருக்கின்றதோ அவ்வளவு ருசியாக இருக்கும். Jegadhambal N -
கறிவேப்பிலை சட்னி(curry leaves chutney recipe in tamil)
#queen2ஈசி,ஹெல்த்தி மற்றும் சுவையான சட்னி. Ananthi @ Crazy Cookie -
சுவையான தக்காளி சாம்பார்🍅🍅🍅🍅
#colours1 இட்லிக்கு அருமையான தக்காளி சாம்பார் செய்ய முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலை தேங்காய், சீரகம் ,சோம்பு மிளகு,பூண்டு,வர மிளகாய், தக்காளி அனைத்தையும் பச்சையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பட்டை, அன்னாசி மொக்கு, நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்,மஞ்சள் தூள், உப்பு அனைத்தையும் நன்கு வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பொட்டுக்கடலை கலவையை கடாயில் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.பச்சை வாசனை போனதும் நமது சுவையான தக்காளி சாம்பார் ரெடி👍👍 Bhanu Vasu -
-
-
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi
More Recipes
கமெண்ட்