சன்னா பிரியாணி

manu
manu @nidhu

சன்னா பிரியாணி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  1. 2 கப்சென்னா
  2. 2 கப்பாசுமதி அரிசி
  3. ஒரு டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவல்
  4. ஒன்றுபச்சை மிளகாய்
  5. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  6. பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை - தாளிக்க
  7. இஞ்சி பூண்டு - அரைக்க
  8. சிறிதளவுகொத்தமல்லி
  9. அரை கப்தயிர்
  10. ஒரு டேபிள்ஸ்பூன்கரம் மசாலாத்தூள்
  11. நான்குவெங்காயம்
  12. 3தக்காளி

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து மூன்று விசில் வைத்து எடுத்துக் கொள்ளவும். பாஸ்மதி அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் எண்ணை பாதி நெய் பாதி ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளிக்கவும். பின்னர் வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

  3. 3

    மிக்ஸி ஜாரில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், தேங்காய், சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    அரைத்த கலவையை குக்கரில் சேர்க்கவும். சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் அரை கப் தயிர், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    பின்னர் அதனுடன் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பின்னர் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும்.

  6. 6

    ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற அளவில் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் சரிபார்த்து குக்கரை மூடி 2 விசில் வந்தவுடன் 10 நிமிடம் சிம்மில் வைக்கவும்.

  7. 7

    பிரஷர் வெளியான பின்பு திறந்து கிளறவும். சுவையான சத்தான சென்னா பிரியாணி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
manu
manu @nidhu
அன்று

Similar Recipes