எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 5 சப்பாத்தி
  2. 2 முட்டை
  3. 50 கிராம் சிவப்பு குடைமிளகாய்
  4. 50 கிராம் மஞ்சள் குடைமிளகாய்
  5. 50 கிராம் பச்சை குடைமிளகாய்
  6. 25 கிராம் முட்டைகோஸ்
  7. 2 பச்சை ‌மிளகாய்
  8. 50 கிராம் கேரட்
  9. 1 பெரிய வெங்காயம்
  10. 5 பல் பூண்டு
  11. சிறியதுண்டு இஞ்சி
  12. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  13. 1 ஸ்பூன் மல்லி தூள்
  14. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  15. 1/2 ஸ்பூன் சில்லி சாஸ்
  16. 1/2 ஸ்பூன் சோயா சாஸ்
  17. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  18. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்

  2. 2

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்

  3. 3

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பிறகு வதங்கியதும் அதில் முட்டைக்கோஸ், கேரட், சிவப்பு குடைமிளகாய், பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பிறகு அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கரம் மசாலா, வறுத்து முட்டை சேர்த்து நன்றாக வதங்கியதும் அதில் நறுக்கிய சப்பாத்தி சேர்த்து வதக்கவும்

  6. 6

    பிறகு அதில் சில்லி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி மல்லித்தழை, ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து இறக்கவும்

  7. 7

    இப்பொழுது சுவையான கொத்து (முட்டை) சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ரேணுகா சரவணன்
அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

Similar Recipes