கொத்து சப்பாத்தி (Kothu Chappathi Recipe in Tamil)

Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123

கொத்து சப்பாத்தி (Kothu Chappathi Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

29நிமிடங்கள்
3நபர்கள்
  1. 3சப்பாத்தி
  2. 3முட்டை
  3. 5பெரிய வெங்காயம்
  4. 1தக்காளி
  5. 1/4ஸ்பூன் மஞ்சள் பொடி
  6. 1/2ஸ்பூன் மிளகாய் பொடி
  7. 1/2ஸ்பூன் மல்லி பொடி
  8. 1/4ஸ்பூன் சோம்பு
  9. 1பச்சை மிளகாய்
  10. 1கொத்து கருவேப்பில்லை
  11. ஆயில்
  12. உப்பு
  13. 3கரண்டி மட்டன் சால்னா
  14. 3/4ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்

சமையல் குறிப்புகள்

29நிமிடங்கள்
  1. 1

    முதலில் சப்பாத்தியை பொடிசாக நறுக்கவும்.

  2. 2

    ஒரு பேனில் 4ஸ்பூன் ஆயில் ஊற்றி சோம்பு, போட்டு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், கருவேபில்லை, பச்சை மிளகாய்,

  3. 3

    உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும், இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

  4. 4

    பிறகு அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

  5. 5

    தக்காளி நன்கு வதங்கியதும், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி சேர்த்து வதக்கவும். பிறகு அதை படத்தில் உள்ளவாறு ஓரமாக வைக்கவும்.

  6. 6

    அதில் முட்டையை ஊற்றி அதிலேயே நன்கு கலந்து விடவும்.

  7. 7

    பிறகு ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் நறுக்கிய சப்பாத்தியை சேர்க்கவும்.

  8. 8

    சப்பாத்தி சேர்த்த பிறகு நன்கு கலந்து விட்டு, கொத்திவிடவும்.

  9. 9

    அடுத்து அதில் மட்டன் சால்னாவை ஊற்றி மிக்ஸ் பண்ணவும். இப்போது சூப்பரான கொத்து சப்பாத்தி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Revathi Bobbi
Revathi Bobbi @rriniya123
அன்று

Similar Recipes