ஆரஞ்சு இஞ்சி டீ(ORANGE GINGER TEA RECIPE IN TAMIL)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

ஆரஞ்சு இஞ்சி டீ(ORANGE GINGER TEA RECIPE IN TAMIL)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 பேர்
  1. 1(ஜூஸ்)ஆரஞ்சு பழம்
  2. 1ஸ்பூன் இஞ்சி,நறுக்கியது
  3. 1ஸ்பூன் டீ தூள்
  4. தேவையானஅளவு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஆரஞ்சு பழத்தை நன்றாக கழுவி,அதன் தோலை துருவிக்கொள்ள வேண்டும்.

    தோலின் ஆரஞ்சு கலர் மட்டும் துருவ வேண்டும்.அழுத்தி துருவினால் வெள்ளைக் கலர் சதையும் வந்துவிடும்.அது கசக்கும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 500ml தண்ணீர் ஊற்றி அதில் துருவிய ஆரஞ்சு தோல் மற்றும் இஞ்சி சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    கொதிக்க ஆரம்பித்ததும்,5 நிமிடங்களுக்கு நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    பின் டீ தூள் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு,வடிகட்டவும்.

  5. 5

    கடைசியாக,ஒரு காபி கப்பில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து,வடிகட்டிய டீ ஊற்றி,கலக்கி அதில் ஒரு துண்டு(தேவைக்கேற்ப) ஆரஞ்சு சாறு பிழிந்து பருகலாம்.

  6. 6

    அவ்வளவுதான். சுவையான,கலர்புல் ஆன ஆரஞ்சு இஞ்சி டீ ரெடி.

    ஆரஞ்சு பழம்,சிறிதளவு புளிப்புச் சுவையுடன் இருந்தால் நன்று.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ananthi @ Crazy Cookie
அன்று
Coimbatore,Tamilnadu

Similar Recipes