கோவா ரவா லட்டு(khova rava laddu recipe in tamil)

Cooking Passion
Cooking Passion @Cooking_2000

கோவா ரவா லட்டு(khova rava laddu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப் சன்ன ரவை
  2. 1 கப் சர்க்கரை
  3. 2 மேஜைக்கரண்டி நெய்
  4. 2 மேஜைக்கரண்டி நறுக்கிய முந்திரி
  5. 2 மேஜைக்கரண்டி நறுக்கிய பாதாம்
  6. 2 மேஜை கரண்டி உலர் திராட்சை
  7. 1/2 தேக்கரண்டி ஏலக்காய்த்தூள்
  8. 1/4 கப் இனிப்பில்லாத கோவா
  9. 1/4 கப் காய்ச்சிய பால்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும் பாதாம் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து ஒரு தட்டில் மாற்றி வைக்கவும்.

  2. 2

    தீயை குறைத்து விட்டு மீதமுள்ள நெய்யில் வெள்ளை ரவை சேர்த்து குறைவான தீயில் மூன்று நிமிடங்கள் வாசனை வரும் வரை வறுக்கவும்.

  3. 3

    பிறகு சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் அடுப்பில் சமைக்கவும்.

  4. 4

    இதில் வறுத்த நட்ஸ் வகைகளை சேர்த்து ஏலக்காய்த் தூளையும் சேர்த்து கலந்து விடவும்.

  5. 5

    கோவா மற்றும் பால் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். இந்தக் கலவையை அடுப்பில் இருக்கும் ரவை கலவையுடன் சேர்த்து கலந்து மேலும் 2 நிமிடம் அடுப்பில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    ரவை லட்டு கலவை முழுமையாக ஆறும் வரை காத்திருந்து உள்ளங்கைகளிலும் தடவி லட்டு பிடித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Cooking Passion
Cooking Passion @Cooking_2000
அன்று

Similar Recipes