ரோட்டுக்கடை சிக்கன் சால்னா(roadside chicken salna recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 minutes
4 பரிமாறுவது
  1. ½ கிலோசிக்கன்
  2. 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  3. 2தக்காளி பொடியாக நறுக்கியது
  4. 2பச்சை மிளகாய்-
  5. ஒரு டேபிள்ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  6. பிரியாணி இலை பட்டை கிராம்பு
  7. கறிவேப்பிலை
  8. அரை ஸ்பூன்மஞ்சள் தூள்
  9. அரை ஸ்பூன்மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. ஒரு ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  11. தேவையான அளவுஉப்பு
  12. வறுத்து அரைப்பதற்கு
  13. ஒரு ஸ்பூன்சோம்பு
  14. அரை ஸ்பூன்சீரகம்
  15. ஒரு ஸ்பூன்கொத்தமல்லி
  16. 5வர மிளகாய்
  17. 4 டேபிள்ஸ்பூன்தேங்காய் துருவியது
  18. அரை ஸ்பூன்கசகசா
  19. தேவையான அளவுபிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய்
  20. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30 minutes
  1. 1

    வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை பட்டை கிராம்பு தாளித்து கறிவேப்பிலை பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்

  3. 3

    வெங்காயம் நன்கு வெந்தவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும் பின்பு தக்காளியை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து தக்காளி மசியும் வரை வேக வைக்கவும்

  4. 4

    பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்

  5. 5

    எண்ணெய் பிரிந்து வந்தவுடன் சிக்கனை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்

  6. 6

    5 நிமிடம் கழித்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிக்கன் முக்கால் பதம் வேகும் வரை மூடி வைக்கவும்

  7. 7

    சிக்கன் முக்கால் பதம் வெந்து வந்தவுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பத்து நிமிடம் கொதிக்க விடவும்

  8. 8

    சால்னா சுண்டி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். ரோட்டுக்கடை சிக்கன் சால்னா ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
அன்று

Similar Recipes