பிளைன் சால்னா(plain salna recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

பிளைன் சால்னா(plain salna recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  1. இரண்டு பெரிய வெங்காயம்
  2. 3 தக்காளி
  3. இரண்டு பச்சை மிளகாய்
  4. நான்கு துண்டு பட்டை
  5. 4 கிராம்பு
  6. 4 ஏலக்காய்
  7. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. இரண்டு ஸ்பூன் மல்லித் தூள்
  9. ஒரு ஸ்பூன் வரமிளகாய் தூள்
  10. அரைக் கப் தேங்காய்
  11. 5 முந்திரி
  12. ஒரு ஸ்பூன் கசகசா
  13. ஒரு துண்டு இஞ்சி
  14. 8 பல் பூண்டு
  15. கால் ஸ்பூன் சர்க்கரை
  16. சிறிதளவுகொத்தமல்லி இலைகள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் லேசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் சேர்த்து அதில் 2 பட்டை 2 கிராம்பு 2 ஏலக்காய் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

  3. 3

    இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  4. 4

    வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

  5. 5

    வெங்காயம் மசாலாவுடன் நன்கு வதங்கியவுடன் அதில் லேசாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விடவும்.

  6. 6

    மிக்ஸி ஜாரில் தேங்காய், பட்டை,கிராம்பு,ஏலக்காய் முந்திரி, கசகசா ஆகியவை சேர்த்து நன்றாக நைசாக அரைத்து வெங்காயம் தக்காளி கலவையில் சேர்க்கவும்.

  7. 7

    தேங்காய் கலவையை சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் நன்றாக வேக விடவும் எண்ணை பிரிந்து வந்த உடன் மேலே கொத்தமல்லியைத் தூவினால் அருமையான சுவையான பிளைன் சால்னா தயார் இதனை சப்பாத்தி பரோட்டாவிற்கு சைடு டிஷ்ஷாக நன்றாக இருக்கும் 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes