சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana

#m2021
எனது படைப்பில் அதிகமாக விரும்பப்பட்ட எனக்கு சந்தோஷம் அளித்த சாம்பார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1/2 கி சுரைக்காய்
  2. 150 கி துவரம்பருப்பு
  3. 10 சின்ன வெங்காயம்
  4. 1 தக்காளி
  5. 1 பச்சை மிளகாய்
  6. 2 பல் பூண்டு
  7. 1 pinch பெருங்காயத்தூள்
  8. 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், சாம்பார்த்தூள்
  9. 3 ஸ்பூன் குழம்பு மசால்த்தூள்
  10. 1 ஸ்பூன் சீரகம், கடுகு
  11. கைப்பிடி அளவு கருவேப்லை,கொத்த மல்லி
  12. சுவைக்கேற்பஉப்பு
  13. 50 ml நல்லெண்ணெய்
  14. தேவைக்கேற்ப தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருள்களை எடுத்துக் கொள்ளவும் 150 கி துவரம்பருப்பை நன்றாக கழுவி அதில் தேவைக்கேற்ப தண்ணீர்ச் சேர்த்து 1 ஸ்பூன் சீரகம் 1/4 ஸ்பூன் மஞ்சள்த்தூள், 2 பல் பூண்டு, 1 pinch பெருங்காயத்தூள்ச் சேர்த்து குக்கரீல் 3 விசில் வைத்துக் கொள்ளவும்

  2. 2

    பின் கடாயில் 50 ml அதில் 1 ஸ்பூன் கடுகு வெடித்ததும் கைப்பிடி அளவு கருவேப்லைச் சேர்த்துபின் 10 சின்ன வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்

  3. 3

    பின் 1 பச்சை மிளகாய், 1 தக்காளி என வதங்கியதும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும்

  4. 4

    பின் நறுக்கிய சுரைக்காயைச் சேர்த்து வதக்கவும் பிறகு 3 ஸ்பூன் குழம்பு மசால் மற்றும் 1/4 ஸ்பூன் சாம்பார் தூள்ச் சேர்த்து வதக்கவும்

  5. 5

    பச்சை வாசனைப் போனதும் தேவையான அளவு தண்ணீர்ச் சேர்த்து வேக விடவும்

  6. 6

    வெந்ததும் துவரம்பருப்பு கலவையைச் சேர்த்துக் கொள்ளவும் பின் கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்

  7. 7

    பின் கொதித்ததும் இறக்கி பறிமாறவும்

  8. 8

    சுவையான சுரைக்காய்ச் சாம்பார் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

Top Search in

எழுதியவர்

Vidhya Senthil
Vidhya Senthil @kishorekeerthana
அன்று

Similar Recipes