சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)

Dhaans kitchen @Dhaanskitchen
சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுரைக்காய் தோல் மற்றும் விதைகள் நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் நறுக்கிய சுரைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, பூண்டு, புளி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 3 சத்தம் வரும் வரை வேக விடவும்
- 3
பின்னர் குக்கர் அழுத்தம் குறைந்த பின் திறந்து தண்ணீரை வடித்து கொள்ளவும்
- 4
மத்து வைத்து நன்றாக கடைந்து பின் வடிகட்டிய தண்ணீரை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை, நசுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்
- 6
பூண்டு நிறம் மாறும் போது அதை மசித்து வைத்த சுரைக்காயில் கொட்டி கிளறவும்
- 7
சுவையான சுரைக்காய் மசியல் தயார். இதை இட்லி,தோசையுடன் பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11445001





















கமெண்ட்