* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#queen1
எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி,

* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)

#queen1
எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி,

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி
6 பேர்
  1. 2 கப்தேங்காய் துண்டுகள்
  2. 1 3/4கப்சர்க்கரை
  3. 3/4 கப்காய்ச்சி ஆறின பால்
  4. 1 ஸ்பூன்ஏலத்தூள்
  5. 1 டீ ஸ்பூன் ருசிக்குஉப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன்நெய்
  7. 1 டீ ஸ்பூன்கோக்கோ பவுடர்
  8. 15அலங்கரிக்க:- முந்திரி

சமையல் குறிப்புகள்

1/2 மணி
  1. 1

    மிக்ஸி ஜாரில் தேங்காய் சர்க்கரை இரண்டையும் போடவும்.

  2. 2

    பின் நன்கு அரைக்கவும்.

  3. 3

    அடி கனமான கடாயில், அரைத்த விழுதுடன்,பாலை சேர்க்கவும்.

  4. 4

    அடுப்பை சிறியதில் வைத்து கிளறி உப்பு சேர்த்து,கோக்கோ பவுடரை கட்டியில்லாமல், பாலில் கரைத்து ஊற்றவும்.

  5. 5

    பின் ஏலத்தூள் போடவும்.நன்கு கொதித்து கெட்டியானதும், நெய்யை விடவும்.

  6. 6

    ஒன்று சேர கெட்டியாகி ஒட்டாமல் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.ஒரு தட்டில் நெய் தடவிக் கொள்ளவும்.

  7. 7

    பின் கலவையை தட்டில் கொட்டி ஆறினதும் வில்லைகள் போடவும்.

  8. 8

    தட்டின் ஓரங்களில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.இப்போது மிகவும் சுவையான, சுலபமான,* தேங்காய், சாக்லேட் பர்பி* தயார்.செய்து பார்த்து அசத்துங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

கமெண்ட் (2)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
சூப்பர் mam. வாழ்த்துக்கள்💐

Similar Recipes