தேங்காய் பர்பி(coconut burfi recipe in tamil)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#cooksnaps CAP (Renuka Bala's recipis)
Cook paadil, இது என்னுடைய 500☺️😊👏 ரெசிப்பி ஆகும்👍. Thank you cook pad,and thank you Renuka sister for your coconut purfi. சமையல் செய்வதில் ஏற்கனவே ஆர்வம் அதிகம்.அதுவும் இந்த cook pad தமிழ் கம்யூனிட்டி யில் சேர்ந்த பிறகு உத்வேகம் அதிகம் ஆகிவிட்டது.செல்லும் இடமெல்லாம் இந்த வாரம் என்ன புது ரெசிபி அல்லது ஏன் இந்த வாரம் எந்த ரெசிபியும் போடவில்லை என்று அனைவரும் கேட்கும் அளவிற்கு குக்பேட் எனக்கு ஒரு பிரபலத்தை தேடித் தந்துள்ளது. இதற்காக நான் குக் பாட் அட்மின் மகி மற்றும் டீமில் உள்ள அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சக எழுத்தாளர்கள் அனைவருக்கும் நிறைய ரெசிப்பிகள் கொடுத்து அதை செய்து பார்க்கத் தூண்டியமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க மகிழ்ச்சியுடன் எனது 500 வது ரெசிபியை பதிவேற்றம் செய்கிறேன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
15 துண்டுகள்
  1. 1கப் துருவிய தேங்காய்
  2. 10 முந்திரி பருப்பு
  3. ஒரு கப் சர்க்கரை
  4. 1/4 கப் பால்
  5. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  6. 1/4teஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. ஒரு சிட்டிகை குங்குமப்பூ(optional)
  8. அலங்கரிக்க முந்திரித் துண்டுகள்(optional)

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    பத்து முந்திரிப்பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக ஒட்டிக் கொள்ளவும். பிறகு அதனுடன் ஒரு கப் தேங்காய் துருவலை சேர்த்து ஒரு சுற்று ஓட்டிக் கொள்ளவும்.(ஸ்டெப் புகைபடம் தவறுதலாக டெலீட் செய்து விட்டேன் அதனால் செய்முறை மட்டும் தருகிறேன். இப்படம் தேவை என்றால் ரேணுகா பாலா அவர்களின் கோகனட் பர்பி செய்முறையை பார்த்துக்கொள்ளவும்)

  2. 2

    இப்போது ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது நான்ஸ்டிக் கடாயில் முந்திரிப்பருப்பு தேங்காய் அரைத்த விழுதை கொஞ்சம் நெய் சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும். சிவக்க விடக்கூடாது.பிறகு கால் கப் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில் நன்றாக கிளறிக் கொண்டே இருக்கவும். 5 நிமிடம் கழித்து ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளவும். கைவிடாமல் மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருக்கவும்.

  3. 3

    நன்கு நுரைத்து ஓரம் ஒட்டாமல் வரும்போது பதம் பார்க்கவும்.இப்போது ஏலக்காய் பொடியை சேர்த்துக் கொண்டு ஒரு கிளறு கிளறி நெய் தடவிய தட்டில் ஊற்றி கால் மணி நேரம் வரை ஆறவிடவும் பிறகு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மேலே ஒரு முந்திரிப்பருப்பு மற்றும் ஒரு சிட்டிகை அளவு குங்கும பூவை தூவினால் நன்றாக இருக்கும். தேங்காயுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்து அதனுடன் குங்கும பூ மேலே தூவி இருப்பதால் அருமையான மணத்துடன் இனிப்பான சுவையான தேங்காய் பர்பி கிடைக்கும்.

  4. 4

    நம் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் மிக விரைவாக இந்த இனிப்பை செய்து விடலாம்.மேலும் குறைவான நெய்யாகவும் இருக்கும் அதிகம் செலவு வைக்காத. மேலே குங்குமப்பூ தூவுவதால் குங்குமப்பூ வாசத்துடன் நல்ல ரிச்சான இனிப்பாக விருந்தில் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes