சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#FC @crazycookie என் தோழி ஆனந்திற்கு இந்த செய்முறையை நான் டெடிகேட் செய்கிறேன்.

ட்ரெண்டிங்கில் உள்ள ஷவர்மாவின் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .ஆனால் அதை கடைகளில் சாப்பிட சில தயங்குவது உடல் நலத்தின் மீது உள்ள அக்கறையில் அதனை வீட்டிலேயே சுலபமாக ஆரோக்கியமான முறையில் செய்து உண்ணலாம்.

சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil)

#FC @crazycookie என் தோழி ஆனந்திற்கு இந்த செய்முறையை நான் டெடிகேட் செய்கிறேன்.

ட்ரெண்டிங்கில் உள்ள ஷவர்மாவின் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் .ஆனால் அதை கடைகளில் சாப்பிட சில தயங்குவது உடல் நலத்தின் மீது உள்ள அக்கறையில் அதனை வீட்டிலேயே சுலபமாக ஆரோக்கியமான முறையில் செய்து உண்ணலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 நபர்கள்
  1. மயோனிஸ் செய்வதற்கு:
  2. 1 முட்டை
  3. 1/4கப் - ரீஃபைண்ட் ஆயில்
  4. 6- மிளகு
  5. 1 தே.க - வினிகர்
  6. 7 பல்- பூண்டு
  7. தேவையானஅளவு- உப்பு
  8. கோதுமை பீத்தா பிரட் செய்வதற்கு:
  9. 1 கப்- கோதுமை மாவு
  10. 1/2தே.க - பேக்கிங் சோடா
  11. 1/2 தே.க - உப்பு
  12. வெஜிடபிள் சாலட் செய்வதற்கு:
  13. 150 கிராம் - கோஸ்
  14. 1 - கேரட்
  15. 1- குடை மிளகாய்
  16. தேவையானஅளவு- மிளகுத்தூள்
  17. தேவையானஅளவு - உப்பு
  18. 1/2 தே.க - வினிகர்
  19. சிக்கன் ஊற வைப்பதற்கு
  20. 250கிராம் - போன்லெஸ் சிக்கன்
  21. 1 தே.க - மிளகாய் தூள்
  22. 1/3 - தே.க - கரம் மசாலா தூள்
  23. தேவையானஅளவு- உப்பு
  24. 1/2 தே.க - மிளகு தூள்
  25. 1 மேஜைக்கரண்டி - தயிர்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    மயோனைஸ் செய்வதற்கு மிக்ஸி ஜாரில் மிளகு, பூண்டு சேர்த்து ஒரு முறை அரைக்கவும். பிறகு அதில் முட்டையை சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு முட்டையை நன்றாக அடித்ததும் சர்க்கரை, வினிகர் சேர்த்ததும். சிறிது நேரம் இடைவெளி விட்டு எண்ணெய் பாகங்களாக பிரித்து சேர்த்துக் கொள்ளவும்.

  3. 3

    சிறிது நேரத்தில் கெட்டியான பதத்திற்கு மயோனைஸ் தயார்.

  4. 4

    கடைகளில் பீத்தா பிரட் எனப்படும் ரொட்டி மைதாமாவை கொண்டு செய்யப்படுவது வழக்கம் சற்று ஆரோக்கியமாக ஆக்குவதற்காக நான் அதை கோதுமை மாவில் செய்துள்ளேன். நன்றாக வந்தது.

  5. 5

    பாத்திரத்தில் கோதுமை மாவு பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  6. 6

    பிசைந்த மாவை 30 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். (மிருதுவாக கிடைப்பதற்கு) வசந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து சப்பாத்தி தேய்ப்பது போல் தேய்த்து தோசை கல் நன்றாக சூடானதும் இருபுறமும் நன்றாக எழும்பி வரும் அளவிற்கு வேகவைத்து எடுக்கவும்.

  7. 7
  8. 8

    கொடுத்துள்ள மசாலா பொருட்களை கொண்டு சிக்கனை நன்றாக ஊற வைத்து எடுக்கவும் குறைந்தது ஒரு அறை மணி நேரம். அதை தவாவில் சேர்த்து நன்றாக வறுத்து எடுக்கவும்.

  9. 9

    வெஜிடபிள் சாலட் செய்வதற்கு நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் உப்பு,, மிளகு தூள், மற்றும் வினிகர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.

  10. 10

    இப்பொழுது வெஜிடபிள் சாலட், சிக்கன், மைனஸ், பித்தா பிரெட் அனைத்தும் தயார்.

  11. 11

    ஷவர்மா செய்வதற்கு முதலில் பித்தா பிரெட் எடுத்து, அதன் மேல் மைனஸ் தடவிக் கொள்ளவும். பிறகு சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி நீளவாக்கில் வைக்கவும்.

  12. 12

    இதனுடன் தயார் செய்து வைத்துள்ள வெஜிடபிள் சாலட் சேர்க்கவும். மீண்டும் ஒரு முறை இதன் மேல் மையொணைஸ் தடவி விருப்பப்பட்டால் இந்த மிளகாய் துகள்கள் சேர்த்து ரோல் செய்து பரிமாறவும்.

  13. 13

    கடைகளில் கிடைக்கும் அதே சுவையில் வீட்டில் ஆரோக்கியமான முறையில் நாமும் ஷவர்மா செய்து சுவைக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

Similar Recipes