தினை தோசை & காரச்சட்னி(thinai dosai and kara chutney recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

தினை தோசை & காரச்சட்னி(thinai dosai and kara chutney recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1டம்ளர் தினை
  2. 1/2டம்ளர் உளுத்தம்பருப்பு
  3. 1/4ஸ்பூன் வெந்தயம்
  4. கார சட்னி செய்ய:
  5. 1ஸ்பூன் கடுகு
  6. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  7. 4 சின்ன வெங்காயம்
  8. 3 தக்காளி
  9. 1 பல் பூண்டு
  10. 1 1/2ஸ்பூன் மிளகாய் தூள்
  11. தேவையானஅளவு உப்பு
  12. சிறிதளவுகறிவேப்பிலை
  13. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் தினை, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து கொள்ளவும்.

  2. 2

    பிறகு இதனை கழுவி சுத்தம் செய்து 6 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்.

  3. 3

    பிறகு கிரைண்டரில் தண்ணீர் இல்லாமல் வடிகட்டி சேர்த்து தண்ணீர் சிறிதளவு தெளித்து தெளித்து நன்கு மையாக அரைத்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி உப்பு சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.

  4. 4

    பிறகு இதனை 8 மணி நேரம் அப்படியே வைத்து புளிக்க விடவும்.

  5. 5

    அடுப்பில் தோசை கல்லை வைத்து ஒரு கரண்டியில் மாவை எடுத்து தோசையாக ஊற்றி சுற்றி நெய் அல்லது எண்ணெய் விட்டு கொள்ளவும்.

  6. 6

    மிக்ஸியில் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு பல், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து இதை சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கவும்.

  7. 7

    சுவையான ஆரோக்கியமான தினை தோசை & காரச்சட்னி தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes