காளான் உருளைக்கிழங்கு பேன்கேக் பிட்சா (Mushroom potato pancake pizza recipe in tamil)

காளான்,உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, கடலை மாவு, மசாலாப் பொருள்கள்,இஞ்சி எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையான, சத்தான ஒரு ப்ரேக் பாஸ்ட் இந்த காளான், உருளைக்கிழங்கு பேன் கேக் பிட்சா.
#birthday3
காளான் உருளைக்கிழங்கு பேன்கேக் பிட்சா (Mushroom potato pancake pizza recipe in tamil)
காளான்,உருளைக்கிழங்கு, கோதுமை மாவு, கடலை மாவு, மசாலாப் பொருள்கள்,இஞ்சி எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையான, சத்தான ஒரு ப்ரேக் பாஸ்ட் இந்த காளான், உருளைக்கிழங்கு பேன் கேக் பிட்சா.
#birthday3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு,கடலை மாவை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
உருளை கிழங்கை தோல் சீவி,துருவி நன்கு தண்ணீரில் கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி, கறிவேப்பிலை, மல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
காளானை கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 5
பின்னர் வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து,வெங்காயம்,மிளகாய்இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
அத்துடன் நறுக்கி வைத்துள்ள மல்லி இலை, காளான், துருவிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 7
பின்னர் மசாலாப் பொருள்கள் சேர்த்து,உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு,மூடி வைத்து வேக வைக்கவும்.
- 8
பின்னர் எடுத்து பௌலில் உள்ள மாவுடன் சேர்க்கவும்.
- 9
கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விடவும். கொஞ்சம் தளர்வான மாவாக கலந்து மாவை பிசைந்து தயாராக வைத்துக் கொள்ளவும்.
- 10
பின்னர் ஒரு தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி தயார் செய்து வைத்துள்ள பேன் கேக் பிட்சா கலவை மாவை சேர்க்கவும்.சமமாக தட்டி விட்டு மூடிவைத்து மிதமான சூட்டில் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 11
வேறு ஒரு தோசை தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும், பேன் கேக்கை திருப்பிப் போட்டு,எண்ணெய் தூவி மேலும் ஐந்து நிமிடங்கள் வேக வைக்கவும்.
- 12
இந்த சமயம் பிட்சா கட் செய்வது போல் கட் செய்து அதன் மேல் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றவும். அப்போது தான் உள்ளே நன்கு வெந்து, ஓரங்கள் மொறு மொறுப்பாக மாறும்.
- 13
இரு பக்கமும் நன்கு வெந்ததும் எடுத்தால் மிகவும் சுவையான, மேலே கிரிஸ்பியாகவும்,உள்ளே மிருதுவாகவும் அருமையான சுவையில் காளான், உருளைக்கிழங்கு பேன்கேக் பிட்சா சுவைக்கத்தயார்.
- 14
இந்த சுவையான பேன்கேக் பிட்சாவை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். இது ஒரு நல்ல ப்ரேக் பாஸ்ட். ஸ்டமக் ஃபில்லிங். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுவைக்கலாம்.
- 15
குறிப்பு:
1.கோதுமை மாவு, கடலை மாவுக்கு பதிலாக அரிசி மாவு,மைதா மாவு சேர்த்தும் செய்யலாம்.ஆனால் அதன் சுவை இது மாதிரி இல்லை. இந்த பேன்கேக் பிட்சா மிகவும் சுவையாக உள்ளது.
2. இதில் காரம் சேர்துள்ளதால் சட்னி எதுவும் இல்லாமல் அப்படியே சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பள்ளிபாளையம் (Mushroom Pallipalayam)
காளான் பள்ளிபாளையம் காரசாரமான சுவையான கிரேவி.சாதம்,சப்பாத்தி போன்ற எல்லா வகையான உணவுகளுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Vattaram Renukabala -
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
காளான் மசாலா தோசை (Mushroom Masala Dosa) (Kaalaan masala dosai recipe in tamil)
#GA4 #week3#ga4 Dosaசுவையான காளான் தோசை. Kanaga Hema😊 -
-
காளான் மஞ்சூரியன் 🔥🍄(mushroom manchurian recipe in tamil)
#npd3 காளான் 🍄மிகவும் எளிதான ஈவினிங் ஸ்நாக்ஸ்.நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து வெறும் அரை மணி நேரத்தில் செய்து முடித்து விடலாம் கூடுதல் சுவையுடன்..பிடித்திருந்தால் லைக் செய்யவும் கமெண்ட் செய்யவும் ஷேர் செய்யவும்.👍🙏☺️ RASHMA SALMAN -
பட்டாணி உருளைக்கிழங்கு அவல் உப்புமா (Greenpeas, potato, puffed rice upma)
அவலுடன் பச்சை பட்டாணி, உருளைக்கிழங்கு எல்லாம் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும். உடல் எடை குறைய மிகவும் உதவும்.#breakfast Renukabala -
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
காளான் குழம்பு(mushroom gravy recipe in tamil)
#ed3மிகவும் எளிமையான ரெசிபி காளான் பிடிக்காதவர்களுக்கும் அதை சாப்பிட்டால் காளான் பிடித்து விடும் Shabnam Sulthana -
காளான் பிரியாணி🍄(mushroom biryani recipe in tamil)
#made1மிகவும் புரத சத்து நிறைந்த ஒரே உணவு காளான். ஏராளமாக 60% புரதசத்து இருக்கிறது. ஆகையால் வாரம் ஒரு முறை காளான் சமைத்து சாப்பிட்டால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்✨. RASHMA SALMAN -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
காளான் காரக்குழம்பு
காளான் குழம்பு நிறைய விதத்தில் செய்யலாம்.நான் காரக்குழம்பு செய்துள்ளேன். சத்துக்கள் நிறைந்த இந்த காளான் குழம்பு மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
காளான் ஆம்லெட் (mushroom omlettee recipe in tamil)
முட்டை ஆம்லெட் சாதாரணமாகச் செய்வார்கள் அந்த ஆம்லெ உடன்நமக்கு பிடித்த காய்கறிகள் மாமிசங்கள் மீன் வகைகள் கலந்து செய்யும்போது குழந்தைகளுக்கும் பிடிக்கும் எல்லா சத்துக்களும் கிடைக்கும் அந்த வகையில் நான் காளான் கலந்து கொடுப்பேன் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் Chitra Kumar -
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
மண்சட்டி காளான் கறி(Mushroom curry recipe in tamil)
#Thechefstory #ATW3கறி குழம்பு சுவையை மிஞ்சும் காளான் குழம்பு ரெசிபி.Fathima
-
காளான் கைமா(mushroom keema recipe in tamil)
மட்டன் கைமா போலவே காளான் கைமாவும் மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
முள்ளு முறுக்கு (மனூப்பு)(mullu murukku recipe in tamil)
#npd3எல்லாரும் விரும்பும் ஒரு ஸ்நாக்,.அரிசி மாவு, கடலை மாவு,.ஸ்பைஸ் பொடிகள் சேர்த்து செய்த சுவையான சத்தான முறுக்கு. Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு போண்டா(potato bonda recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் வீட்டிலேயே செய்த சத்தான உணவாக சாப்பிடலாம்cookingspark
-
காரா சேவை(kara sev recipe in tamil)
#npd3நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு மிளகு, சீரக, ஓம , மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
உருளைக்கிழங்கு போண்டா potato bonda recipe in tamil
#kilanguஇன்று குக் பாட் கிழங்கு போட்டிக்காக உருளைக்கிழங்கு போண்டாவை முதன்முதலாக செய்தேன். ஹோட்டல் டீ கடை போன்றவற்றில் விற்பனை செய்யும் போண்டாவை போல சுவையுடன் இருந்தது. Meena Ramesh -
உருளைக்கிழங்கு க்ரீன் மசால்(potato masala recipe in tamil)
பச்சைப்பட்டாணி, உருளைக்கிழங்கு, கொத்தமல்லித்தழை அரைத்த விழுது சேர்த்து செய்யும் இந்த மசால் மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
காரா சேவை (Kaaraa sevu recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக் ,.அரிசி மாவு, கடலை மாவு (besan). மிளகு, சீரக மிளகாய் பொடிகள், சேர்த்து செய்த சுவையான சத்தான ஸ்நாக். #besan #GA4 Lakshmi Sridharan Ph D -
காளான் மிளகு வறுவல் (Mushroom Pepper Fry Recipe in Tamil)
காளான் சைவ மட்டன் ஆட்டுக்கறியில் இருக்கும் அனைத்து சத்தும் காளானில் உண்டு காளான் பால் காளான் கோழி காளான் பட்டன் காளான் கோழிகளின் சுவையை கொடுக்கக்கூடியது பால் காளான் மற்றும் பட்டன் காளான் ஆட்டுக்கறி சுவை கொடுக்கக்கூடியது பிரியாணி கிரேவி வறுவல் செய்யலாம் Chitra Kumar -
உருளைக்கிழங்கு சாதம்(potato rice recipe in tamil)
#qkஇரவுக்கு தனியாக சமைக்காமல்,மதியம் செய்த சாதத்தை வைத்து,சுவையான உருளைக்கிழங்கு சாதம் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
உருளைக்கிழங்கு வறுவல்
இந்த வறுவல் தயிர், ரசம் சத்தத்துடன் ரொம்ப நன்றாக இருக்கும்.சப்பாத்தி கூட இந்த வறுவல் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடலாம் Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (6)