பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1மணி நேரம்
  1. 3/4 கப் பீட்ரூட் சாறு
  2. 1 கப் கடலை மாவு
  3. 1&1/4 கப் சர்க்கரை
  4. 2 கப் நெய்
  5. 1டேபிள் ஸ்பூன் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    பீட்ரூட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

  2. 2

    அத்துடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

  3. 3

    அரைத்த விழுதை ஒரு காஃபி வடிப்பானில் சேர்த்து பீட்ரூட் சாரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    கடலை மாவை வறுத்து சலித்து வைக்கவும். அத்துடன் முக்கால் கப் நெய் சேர்த்து நன்கு கலந்து தயாராக வைக்கவும்.

  5. 5

    ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அத்துடன் தயாராக வைத்துள்ள பீட்ரூட் சாரை சேர்க்கவும்.

  6. 6

    பின்னர் ஸ்டவ்வில் வைத்து சர்க்கரை கரையும் வரை கலக்கவும்.

  7. 7

    சர்க்கரை கரைந்து நுரை வரும்போது, நெய்யில் கலந்து வைத்துள்ள கடலை மாவை சேர்க்கவும். பின்னர் மிதமான சூட்டில் வைத்து கை விடாது கலந்து கொண்டே இருக்கவும்.

  8. 8

    அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கலக்கவும். நன்கு பொங்கி வரும் போது ஸ்டவ் ஆஃப் செய்து விட்டு கொஞ்சம் நெய் சேர்க்கவும். நெய் முழுவதும் மைசூர் பாக் உருஞ்சிவிடும்.

  9. 9

    பின்னர் எடுத்து ஒரு நெய் தடவிய தட்டில் சேர்க்கவும்.

  10. 10

    பதினைந்து நிமிங்களுக்கு பிறகு விருப்பப்படி துண்டுகள் போடவும்.

  11. 11

    தயாரான பீட்ரூட் மைசூர் பாக்கை எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.

  12. 12

    இப்போது மிகமிக சுவையான பீட்ரூட் மைசூர் பாக் கண்கவர் வண்ணத்தில்,அருமையான சுவையில் சுவைக்கத்தயார்.

  13. 13

    இந்த இனிமையான பீட்ரூட் மைசூர் பாக் உங்கள் அனைவருக்கும்☺️😍

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (24)

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes