நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)

Meena Saravanan
Meena Saravanan @cook_23486853

அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5-6 பேர்
  1. 1 கப்கடலை மாவு
  2. 1 கப்தண்ணீர்
  3. 2 கப்சர்க்கரை
  4. 3 கப்நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கடலை மாவை வெறும் கடாயில் அதன் பச்சை வாசம் போகும் வரை வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  2. 2

    பின் ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி உருக்க வேண்டும்.

  3. 3

    பின் அதில் கடலை மாவு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கட்டி இல்லாமல் நன்றாக கிளறவும்.

  4. 4

    இவற்றை தனியாக எடுத்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

  5. 5

    பின் கடலை மாவு கலவையை அதில் சேர்த்து நன்றாக கிளறவும்.

  6. 6

    சர்க்கரை தண்ணீர் வற்றி கெட்டியாகும் வரை கிளறவும். பின் அவற்றை சதுர மோல்ட்இல் அடியில் எண்ணெய் தடவி ஊற்ற வேண்டும்.

  7. 7

    அறை வெப்ப நிலைக்கு வந்தவுடன் விருப்பமுள்ள வடிவில் செய்து ருசிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meena Saravanan
Meena Saravanan @cook_23486853
அன்று

Similar Recipes