பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Banana choco chips cookies recipe in tamil)

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

#FC
நானும் தோழி கவிதாவும் சேர்ந்து பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் செய்து பதிவிட்டுள்ளோம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
தலா 2 வீதம் 8 பேர்
  1. 3பழுத்த வாழைப்பழம்
  2. 1&1/2 கப் மைதா மாவு
  3. 1/4 கப் பிரவுன் சுகர்
  4. 1/4 கப் வெள்ளை சர்க்கரை
  5. 1டீஸ்பூன் பேக்கிங் சோடா
  6. 1/4 டீஸ்பூன் உப்பு
  7. 1/4 கப் உருக்கிய வெண்ணெய்
  8. 1/4 கப் சாக்கோ சிப்ஸ்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பௌலில் நன்கு பழுத்த வாழைப்பழத்தை சேர்த்து போர்க் வைத்து நன்கு மசித்துக்கொள்ளவும்.

  2. 2

    அத்துடன் நாட்டு சர்க்கரை, வெள்ளை சர்க்கரை இரண்டையும் சேர்க்கவும்.

  3. 3

    பின்னர் உப்பு,பேக்கிங் சோடா சேர்க்கவும்.

  4. 4

    எல்லாம் சேர்த்து நன்கு பீட் செய்யவும். பின்னர் உருக்கிய வெண்ணெய் சேர்க்கவும்.

  5. 5

    மைதா மாவு, சாக்கோ சிப்ஸ், உருக்கிய வெண்ணெய், எல்லாம் சேர்த்து நன்கு கலக்கவும்.

  6. 6

    பின்னர் குக்கீஸ் கலவை உள்ள பௌலை கிளின் பிலிம் பேப்பர் வைத்து மூடி ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

  7. 7

    பேக்கிங் ட்ரே எடுத்து அதில் பட்டர் ஷீட் போட்டு பேக் செய்ய தயாராக வைக்கவும்.

  8. 8

    ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த குக்கீஸ் கலவையை ஒரு முறை கலந்து,தயாராக உள்ள பேக்கிங் ட்ரேயில் ஐஸ் கிரீம் ஸ்கூப்பில் எடுத்து சமமான அளவில் வைக்கவும். மேலே சாக்கோ சிப்ஸ் தூவவும்.

  9. 9

    பின்னர் மைக்ரோ வேவ் ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் 7 நிமிடங்கள் பிரீ ஹீட் செய்து, பின்பு குக்கீஸ் உள்ள பேக்கிங் ட்ரேயை வைத்து பதினான்கு நிமிடங்கள் பேக் செய்து இரண்டு நிமிடங்கள் கிரில் செய்து எடுக்கவும்.

  10. 10

    இப்போது மிகவும் சுவையான கிரிஸ்பி பனானா சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் சுவைக்கத் தயார்.

  11. 11

    நானும் கவிதாவும் சேர்ந்து பேக் செய்த சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் மற்றும் சாக்கோ சிப்ஸ் மப்பின் இரண்டும் மிகவும் அருமையான சுவையில் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes