பிரெட் மசாலா

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#CB
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிரெட்டை விரும்புவார்கள்.அதையே விதவிதமான ரெசிபியாக செய்யலாம்.பிரெட்டை வைத்து, பிரெட் மசாலா செய்து இருக்கின்றேன்.மிகவும் சுவையாக இருந்தது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
6 பேர்
  1. 12 ஸ்லைஸ்சால்ட் பிரெட்
  2. 1பெரிய வெங்காயம்
  3. 2தக்காளி சிறியது
  4. 1ஸ்பூன்தனி மிளகாய் தூள்
  5. 1ஸ்பூன்தனியா தூள்
  6. 1 டேபிள் ஸ்பூன்தயிர்
  7. 1 டீஸ்பூன்ம.தூள்
  8. 1/2டீஸ்பூன்கரம் மசாலா தூள்
  9. 4 பல்பூண்டு
  10. 1 துண்டுஇஞ்சி
  11. ருசிக்குஉப்பு
  12. தேவையான அளவுநெய்
  13. 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  14. கறிவேப்பிலை (அ) கொத்தமல்லி தழை 1 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    வெங்காயத்தை பொடியாகவும், தக்காளியை பெரிய துண்டுகளாகவும், நறுக்கவும்.

  2. 2

    மிக்ஸி ஜாரில், தக்காளி, பூண்டு, இஞ்சி, தயிர், தனியா தூள், தனி மி.தூள் சேர்த்து மைய அரைக்கவும்.

  3. 3

    அடுப்பை மீடியத்தில் வைத்து, தவாவில், பிரெட் ஸ்லைஸ்களின் மேல் நெய் தடவவும்.

  4. 4

    இரு பக்கமும் டோஸ்ட் செய்து, தட்டில் எடுக்கவும்.பின் சதுரங்களாக கட் செய்யவும்.

  5. 5

    அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெங்காயம், ம.தூள், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

  6. 6

    வதங்கியதும்,அரைத்த விழுது, கரம் மசாலா தூள், போட்டு நன்கு வதக்கவும்.

  7. 7

    பிறகு கட் செய்த பிரெட் துண்டுகளை போட்டு உடையாமல் கிளறி, கறிவேப்பிலை போடவும்.

  8. 8

    மெதுவாக கலந்து, அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.

  9. 9

    பிறகு அதனை பிளேட்டுக்கு மாற்றவும்.இப்போது, சுவையான,*பிரெட் மசாலா*தயார். குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes