எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
  1. 1 கப் வெள்ளை ரவை
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 2 கப் பால்
  4. 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  5. 1/2 கப் ஸ்பூன் நெய்
  6. ஒரு சிட்டிகை கேசரி கலர் பவுடர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயை எடுத்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி காய்ந்ததும், ரவையை சேர்த்து நன்கு வறுக்கவும்.

  2. 2

    வேறு ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் அதில் இரண்டு கப் பால் சேர்த்து கொதிக்க விடவும். வறுத்த ரவையை சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    அத்துடன் சர்க்கரை,கேசரி கலர் பவுடர் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும்.

  4. 4

    கொஞ்சம் நெய் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் நன்கு கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து இறக்கினால் மோதகம் செய்ய கேசரி தயார்.

  5. 5

    பின்னர் பொடித்த நட்ஸ் முந்திரி, திராட்சை, பாதாம் எல்லாம் நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும்.

  6. 6

    தயாரான கேசரி சூடு ஆறியதும் கெட்டியாகிவிடும். பின்னர் எடுத்து உருட்டி நடுவில் வறுத்து வைத்துள்ள நட்ஸ்ஐ வைத்து உருட்டி, மோதகம் அச்சில் வைத்து அழுத்தி எடுத்தால் ரவா கேசரி மோதகம் தயார்.

  7. 7

    மிகவும் அருமையான சுவையில் விநாயகருக்கு உகந்த ரவா கேசரி மோதகம் தயார்.

  8. 8

    தயாரான மோதகத்தை எடுத்து ஒரு தட்டில் வைத்து விநாயகருக்கு படைக்கவும்.

  9. 9

    ரவா கேசரி செய்வது போல் செய்து,நடுவில் நட்ஸ் வைத்து பிடித்த இந்த ரவா கேசரி மோதகம் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes