சத்து சுவை கூடிய தோசை

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
USA

ஜோவார் ஏகப்பட்ட சத்து நிறைந்த சிறு தானியம். இதனுடன் மாசா ஹேரினா சேர்த்து செய்தேன். மாசா ஹேரினா (Maasa harina) மெக்சிகன் கார்ன் மாவு. ஆயிரங்காலத்து முறையில் தயாரித்த மாவு. தோசை சத்தும், சுவையும், மணமும் கூடியது. வெள்ளரி ஒரு தனி சுவையும் மணமும் இந்த ரேசிபிக்கு கொடுக்கிறது. தோசை மேல் ஆசை இல்லாதவர்கள் யாரும் இல்லை. எளிதில் செய்யக்கூடியாது செய்து சுவைத்து பகிர்ந்து மகிழுங்கள்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 2 கப் பொன்னி பச்சரிசி
  2. ½ கப் முழு உளுந்து
  3. 1 தேக்கரண்டி வெந்தயம்
  4. ½ கப் ஜோவர் மாவு
  5. ½ கப் மாசா ஹேரினா
  6. ½ கப் வெள்ளரிக்காய். துருவியது
  7. ½ கப் வெங்காயம், துருவியது
  8. 1பச்சை மிளகாய், துருவியது
  9. 1 தேக்கரண்டி இஞ்சி. தோலுரித்து துருவியது
  10. ¼ கப் கொத்தமல்லி. பொடியாக நறுக்கியது
  11. 1 தேக்கரண்டி ஈஸ்ட்
  12. தேவையானஎண்ணை
  13. தேவையானஉப்பு
  14. தோசை

சமையல் குறிப்புகள்

35 நிமிடங்கள்
  1. 1

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்

  2. 2

    ஒரு செக்லிஸ்ட் தயாரிக்கவும். தேவையான பொருட்களை சமையல் செய்யும் இடத்தின் அருகில் வைக்கவும்

  3. 3

    6 கப் நீர் சேர்த்து உளுந்து + வெந்தயம் அரிசி ஊறவைக்க.; 6 மணி நேரமாவது ஊறவேண்டும். நான் ஓவெர்நைட் ஊறவைத்தேன்.வடித்து நீர் சேர்த்து முதலில் அரிசி, உளுந்து வெந்தயம் பிளேண்டரில் போட்டு மழ மழ வென்று அறைக்கவும்.
    ஜோவார், மாசா ஹேரினா மாவு இரண்டையும் ஒரு கிண்ணத்தில் குக்கரில் வைத்து மூடி 15 நிமிடங்கள் நீராவியில் வேகவைக்க. பிரஷர் வேண்டாம். வெளியே எடுத்து 2 கப் நீரில் கரைக்க. இதையும் பிளேண்டரில் அறைந்து கொண்டிருக்கும் மாவுடன் சேர்த்து அரைக்க.

  4. 4

    தோசை மாவை பெரிய பாத்திரத்தில் போட்டு ஈஸ்ட் சேர்த்து சுத்தமான கையால் ஒன்றாக கலக்க. 4 மணி நேரத்தில் பொங்கிவிடும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும், வெள்ளரி, வெங்காயம், பச்சை, இஞ்சி மிளகாய் துருவல்கள். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, சீரகம் சேர்த்து கிளற. தோசைசெய்ய மாவு தயார்

  5. 5

    தோசைக் கல்லை மிதமான நெருப்பின் மேல் வைக்க, சூடான பின், எண்ணை தடவுக. நான் இரும்பு தோசைக் கல்லை உபயோகிப்பேன். வெங்காயத்தை 2ஆக வெட்டி எண்ணை தடவி தோசை கல் மேல் எண்ணை தடவினால். தோசை வாசனையாக வரும். எப்பொழுதும் தோசை செய்வது போல 1 கப் மாவில் ஒரு தோசை செய்க. தோசை மேல் பரவலாக ஒரு தேக்கரண்டி எண்ணை ஊற்றுக. மேல் பக்கத்தில் புள்ளிகள் தெரியும் திருப்பி போடுக. இரண்டு பக்கமும் சிறிது பொன் சிவப்பாக வேண்டும். 2-3 நிமிடங்களில் சுவையான சத்தான வாசனையான தோசை தயார். தயாரான தோசையை தட்டில் போடுங்கள்

  6. 6

    எப்பொழுதும் சுவைத்துப் பாருங்கள். சூடாகவும் சாப்பிடலாம், ஆறினவுடனும் சாப்பிடலாம். சாம்பாரோடோ, மிளகாய் பொடியுடனோ, அல்லது விருப்பமான சட்னியோடோ பரிமாறுக

  7. 7

    தோசை சாஃப்ட் ஆக வேண்டுமானால். தோசை கல்லை தோசை வார்த்த பின் முடி வைக்க. மொரு மொரு தோசை வேண்டுமானால் மூடி வைக்க வேண்டாம். இரும்பு தோசை கல் சூடு retain செய்யும். மிதமான நெருப்பில் (medium high) சுடுக

    புளித்த மாவு உடல் ஆரோகியத்திர்க்கு நல்லது. ஈஸ்ட் ஒரு செல் புரதம் கூடிய மைக்ரோ ஆர்கனிசம் மாவில் ஈஸ்ட் மல்டிப்ளை ஆகும் பொது புரத சத்து அதிகமாகும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
அன்று
USA
I am a scientist with a Ph.D from University of Michigan. Ann Arbor. I also have a M. SC from University of Madras. Enjoy sharing my knowledge in science and my experience in gardening and cooking with others. I am a free lance writer, published several articles on Indian culture, traditions, Indian cuisine, science of gardening and etc in National and Inernational magazines. I am a health food nut. I am passionate about photography
மேலும் படிக்க

Similar Recipes