சின்னமுள்ளன்மீன் குழம்பு(கேரளா சமையல்)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

# fish kulambu

சின்னமுள்ளன்மீன் குழம்பு(கேரளா சமையல்)

# fish kulambu

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
4பேர்கள்
  1. சின்ன முள்ளன் மீன் -அரைகிலோ
  2. புளி-எலுமிச்சைபழஅளவு
  3. உப்பு -தேவைக்கு
  4. தனி மிளகாய்தூள்- 2 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள்- 1ஸ்பூன்
  6. சின்ன வெங்காயம்- 6
  7. தேங்காய்துருவல்- அரைகப்
  8. சீரகம்- அரைஸ்பூன்
  9. தேங்காய் எண்ணெய்- 6 ஸ்பூன்
  10. கடுகு -கால்ஸ்பூன்
  11. கருவேப்பிலை- 1 கொத்து

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    முதலில் முள்ளன் மீனை சுத்தம் செய்து கொள்ளவும்.புளியை வெந்நீரில் ஊறப்போடவும்.

  2. 2

    புளியைக் கரைத்துதண்ணீரை வடிகட்டிஎடுத்துக் கொள்ளவும்.அதை மீன் சட்டியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.அதில் 2ஸ்பூன் மிளகாய்தூள், உப்பு,மஞ்சள்தூள் சேர்க்கவும்.

  3. 3

    தேங்காய், வெங்காயம்,சிறிது சீரகம்சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அதையும் சேர்த்துக்கொள்ளவும்.

  4. 4

    2 பச்சை மிளகாய் சேர்க்கவும்..குழம்பு நன்கு கொதிக்கவிடவும். பிறகு சுத்தம் பண்ணிய முள்ளன் மீன்களை குழம்பில் சேர்க்கவும்.

  5. 5

    விரைவில் குழம்பில் மீன்வெந்து விடும்.பின்வேறு பாத்திரத்தில் 6 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை தாளித்து குழம்பில் ஊற்றவும்.

  6. 6

    ஒரு கொதி கொதித்து எண்ணெய் மேலே பளபள வென்று வரும் போது கேஸை ஆப் பண்ணவும். சின்ன முள்ளன் மீன் குழம்பு ரெடி 🙏😊நன்றி மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes