*மாங்காய், தேங்காய், துவையல்*

மாங்காய் சீசன் என்பதால், இதனை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம். மாங்காயுடன், தேங்காய் சேர்த்து செய்த இந்த துவையல் மிகவும் சுவையாக இருந்தது. இந்த ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். மாங்காயை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காயை துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
- 2
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், மாங்காய், தேங்காய், ப.மிளகாய், சி.மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதக்கினதும் அடுப்பை நிறுத்தி விட்டு ஆறவிடவும.
- 4
அடுப்பை சிறு தீயில் வைத்து கடாயில், 1/4 ஸ்பூன் ந.எண்ணெய் காய்ந்ததும், க.பருப்பு, உ.பருப்பு சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்து ஆற விடவும்.
- 5
பெரிய ஜாரில், முதலில் வதக்கினதை போட்டு, உப்பு சேர்த்து, அரைக்கவும்.
- 6
பிறகு வறுத்த பருப்பை சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 7
அரைத்ததை பௌலுக்கு மாற்றவும்.
- 8
அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1/4 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, பெருங்காயத்தூள், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 9
தாளித்ததை பௌலில் போடவும்.
- 10
பின் ஒன்று சேர கலந்துக் கொள்ளவும். இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான,*மாங்காய், தேங்காய், துவையல்*தயார். செய்து பார்த்து அசத்தி, என்ஜாய் செய்யவும்.
- 11
குறிப்பு:- இதற்கு புளி தேவையில்லை. சூடான சாதத்தில், நெய் (அ) ந.எண்ணெய் விட்டு பிசைந்து, சுட்ட, பொரித்த, அப்பளத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*


*வாட்டர் மெலோன் ரசம்*


*மாங்காய் மசியல்*


*மாங்காய் ரசம்*


*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)


*மின்ட் துவையல்*


பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)


*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)


* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)


*லெமன் அரிசி சேவை*


*புதினா துவையல்*


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


*கேரட், காராமணி, தேங்காய், பொரியல்*


*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*


*வாழைத்தண்டு, துவையல்*(valaithandu thuvayal recipe in tamil)


*பீட்ரூட், தேங்காய், பொரியல்*(beetroot poriyal recipe in tamil)


*கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*


கோங்கூரா பருப்பு துவையல் #magazine 6


* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)


மாங்காய் துவையல்


மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)


*சேப்பங்கிழங்கு மசியல்*


*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*


*பாரம்பர்ய, தஞ்சாவூர், முருங்கைக்காய், ரேஸ் குழம்பு*(murungaikkai kulambu recipe in tamil)


*பச்சை மாங்காய் குழம்பு*


*ஒன்பாட் ரசம் சாதம்*


* கிரிஸ்பி தட்டை * (தீபாவளி ஸ்பெஷல்)


தேங்காய் சாதம் - உருளை காரக் கறி


*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)

கமெண்ட் (2)