*மின்ட் துவையல்*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க பெரிதும் உதவுகின்றது. வாயுத் தொல்லையை அகற்றுகின்றது. மேலும் சளி, கப கோளாறுகளுக்கு நல்ல மருந்தாகும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
6 பேர்
  1. புதினா 1 கட்டு
  2. தேங்காய் 1/4 மூடி
  3. ப.மிளகாய் 2
  4. புளி கொட்டை பாக்களவு
  5. கல் உப்பு ருசிக்கு
  6. வறுக்க:- க.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  7. உ.பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  8. சி.மிளகாய் 7
  9. தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
  10. பெருங்காயத்தூள் 1 டீ ஸ்பூன்
  11. சி.மிளகாய் 2
  12. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  13. எண்ணெய் 3 1/2 ஸ்பூன்
  14. தண்ணீர் அரைக்க 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

  2. 2

    புதினாவை சுத்தம் செய்து, ஆய்ந்து, அலசிக் கொள்ளவும். தேங்காயை துண்டுகளாக்கவும்.

  3. 3

    அடுப்பை, சிறு தீயில் வைத்து கடாயில், 3 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், க.பருப்பு, உ.பருப்பு, புளி, ப.மிளகாய், சி.மிளகாயை, கருகாமல் சிவக்க வறுத்து தட்டில் ஆறவிடவும.

  4. 4

    மீதமுள்ள எண்ணெயில், புதினாவை போட்டு வதக்கியதும், தேங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    வதக்கியதும், ஆறவிடவும்.

  6. 6

    ஆறியதும், மிக்ஸி ஜாரில், வதக்கிய, புதினா, தேங்காய், உப்பு சேர்த்து, அரைக்கவும்.

  7. 7

    அரைத்ததும், வறுத்த பருப்புகளை சேர்த்து, 2 ஸ்பூன் தண்ணீர் விட்டு, சற்று கொரகொரப்பாகவும், கெட்டியாகவும், அரைக்கவும்.

  8. 8

    அரைத்ததை, பௌலுக்கு மாற்றவும்.

  9. 9

    அடுப்பை சிறு தீயில் வைத்து, கடாயில், 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

  10. 10

    தாளித்ததை நன்கு கலந்துக் கொள்ளவும்.

  11. 11

    இப்போது, சுவையான, சுலபமான, வித்தியாசமான, ஹெல்தியான,*மின்ட் துவையல்*தயார். செய்து பார்த்து அசத்தி என்ஜாய் செய்யவும்.

  12. 12

    குறிப்பு:- இந்த துவையல், சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும். சூடான சாதத்தில், நெய் (அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes