*ஹோட்டல் ஸ்டைல் கார சட்னி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

இந்த சட்னி செய்வது மிகவும் சுலபம். தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
8 பேர்
  1. பெரிய வெங்காயம் 3
  2. பழுத்த தக்காளி 4
  3. காஷ்மீரி மிளகாய் 8
  4. புளி நெல்லிக்காய் அளவு
  5. பெரிய பல் பூண்டு 5 (தோலுடன்)
  6. உப்பு ருசிக்கு
  7. தாளிக்க:- கடுகு 3/4 டீ ஸ்பூன்
  8. உ.பருப்பு 1 1/2 டீ ஸ்பூன்
  9. காஷ்மீரி மிளகாய் 1
  10. கறிவேப்பிலை 1 ஆர்க்கு
  11. ந.எண்ணெய் 1 1/2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், தக்காளியை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. 3

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, 1டேபிள் ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின வெங்காயம், உப்பு, சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.

  4. 4

    அடுத்து, தக்காளி, மிளகாய், புளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

  5. 5

    வதக்கினதை நன்கு ஆறவிடவும.

  6. 6

    ஆறினதை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைக்கவும்.

  7. 7

    பிறகு பௌலுக்கு மாற்றவும்.

  8. 8

    அடுப்பை சிறு தீயில் வைத்து, 1/2 ஸ்பூன் ந.எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

  9. 9

    தாளித்ததை பௌலில் கொட்டி, நன்கு கலந்துக் கொள்ளவும்.

  10. 10

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஹோட்டல் ஸ்டைலில் கார சட்னி*தயார். இது, தோசை, இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, பூரிக்கு, மிகவும் ஆப்ட்டாக இருக்கும். இது ஹோட்டல் ஸ்டைலில் மிகவும் சுவையாக இருக்கும். ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவையைக் கொடுக்கும். செய்து பார்த்து, அசத்தி என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes