*நுங்கு குல்ஃபி*

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது.

*நுங்கு குல்ஃபி*

நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை உள்ளது. வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், இரண்டுக்குமே நுங்கு அருமருந்தாக உள்ளது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
8 பேர்
  1. நுங்கு 8
  2. காய்ச்சி ஆறின பால் 2 டம்ளர்
  3. சர்க்கரை 1/4 கப்
  4. சோள மாவு 1 டேபிள் ஸ்பூன் (கோபுரமாக)
  5. ஐஸ்க்ரீம் குச்சிகள் 8
  6. மேலே போட, நுங்கு துண்டுகள் 4 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    நுங்கை சுத்தம் செய்து, தோலை நீக்கி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி பிளேட்டில் போடவும்.

  3. 3

    பெரிய மிக்ஸி ஜாரில், நுங்கு, சர்க்கரை, சேர்த்து நன்கு அரைக்கவும்.

  4. 4

    அடுத்து பாலை ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில் அரைத்ததை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  6. 6

    சோள மாவை பாலில், சேர்த்து, கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.

  7. 7

    நன்கு கொதித்து குறுகினதும், சோளமாவு கரைசலை ஊற்றி கைவிடாமல் கிளறி, ஒன்று சேர சிறிது கெட்டியானதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.

  8. 8

    இறக்கி ஆறினதும், டம்ளர்களில் ஊற்றி மேலே நுங்கு துண்டுகளை போடவும்.

  9. 9

    பிறகு ஐஸ்க்ரீம் குச்சிகளை சொருகி, ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைக்கவும்.

  10. 10

    பிறகு வெளியில் எடுத்து, டம்ளரின் அடிப்பகுதியை குழாயின் கீழே 1 நிமிடம் காட்டி, டம்ளரில் இருந்து எடுக்கவும்.

  11. 11

    இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*நுங்கு குல்ஃபி* தயார். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்து, அனைவரும் என்ஜாய் செய்யவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Similar Recipes